Archive for the 'பிப்ரவரி' Category

Feb 11

அது , அது மட்டுமே காதல்! #11

நம் பிரிவின் கடைசி புள்ளியில் ஆரம்பிக்கிறது அடுத்த சந்திப்பிற்கான ஆயுத்தம்! * கடைசிவரை பேசவதற்காக எடுத்து வந்த வார்த்தைகள் பேசப்படமலேயே திரும்புகின்றன; நம் சந்திப்புகளில்! * பூங்காவின் வாசலில் உனக்காக பூ வாங்க அரைமுழம் அதகமாய் அளக்கிறாள் பூக்காரகிழவி! * மூச்சு முட்டும் தொலைவில் நாம் சந்தித்துக் கொள்ளும்பொழுது நீ மூச்சுவிடும் சிலையாகிறாய்; நான் மூர்ச்சையாகிறேன்! * மேல் விழுந்து தங்கும் இலைகளை தட்டிவிடாதே! நம் சந்திப்பிற்கு அதனடியை தேர்ந்ததற்கு நன்றி பகன்று ஆசிர்வதிக்கிறது அம்மரம்! – [...]

Feb 10

அது , அது மட்டுமே காதல்! #10

முத்தம் நம் ஊடல் முறிவுக்கான சமாதான ஒப்பந்தம்! * உன்னை என்னிடம் புதிதாயும் என்னை உன்னிடம் புதிதாயும் தரும் வல்லமை ஊடலுக்கு பின்னான அக்கணத்திற்கே வாய்த்திருக்கிறது! * ஊடல் முறிவு தருணத்தில் உன் கண் தங்கும் ஒற்றை துளி கண்ணீரில் நதி மூலத்துளியின் தூமை! * நம் ஊடலுக்கான சமாதானத்தோடு வருகிறாய்; மெல்ல விடிய தொடங்குகிறது என் மேல் கவிந்த இரவு! * நீ தந்துபோன சில முத்தங்களும் சில புன்னகைகளும் போதுமாயிருக்கிறது; ஊடல் முறித்து திரும்பும் [...]

Feb 09

அது , அது மட்டுமே காதல்! #9

உன்னை மையப்புள்ளியாய் கொண்டே சுற்றுகிறது என் உலகம்! * என் எல்லா ஜாதகக் கட்டங்களிலும் உன் பெயர்! * பிரிந்திருக்கும் சமயங்களில் மெளனமாய் அழுதிருக்கும் இதயங்கள் – அருகாமையில் சத்தமாய் பேசத் தொடங்கிவிடுகின்றன நம்மை கையமர்த்திவிட்டு! * தொட்டு பேசியதற்கே எனை பாவியாக்குகிறது உன் நாக்கு; கனவில் புக்கு பார்த்தால் என்னை என்ன சொல்லி ஏசும்?! * நீ இல்லா நான் வெற்று காகிதத்திலான கவிதை புத்தகம்! – ப்ரியன். அது , அது மட்டுமே காதல்! [...]

Older Entries »

FireStats icon Powered by FireStats