Archive for the '2009' Category

Feb 16

நீ…நான்…பின்,நமக்கான மழை…

  அது , அது மட்டுமே காதல் வரிசையின் தொடர்ச்சி : #11 , #10 , #09 , #08 , #07 , #06 , #05 ,#04 , #03 , # 02 , # 01 நீயும் நனைந்தாய் நானும் நனைந்தேன் நம்மோடு சேர்ந்து தானும் நனைந்து நடுங்கியது மழை! * அடித்து பெய்யும் மழையில் கரைகிறது ஏதாவது ஒரு காதலின் கண்ணீர்! * மழை மழையை மட்டும் கொணர்வதில்லை சில நேரங்களில் சில தேவதைகளையும்! * நனைந்து சுகித்திருந்த உன்னை அம்மா இழுத்துப் போக சோவென அழத்தொடங்கியது மழை! * சைவமான என்னை அசைவமாக்கிப் போகிறது [...]

Feb 11

அது , அது மட்டுமே காதல்! #11

நம் பிரிவின் கடைசி புள்ளியில் ஆரம்பிக்கிறது அடுத்த சந்திப்பிற்கான ஆயுத்தம்! * கடைசிவரை பேசவதற்காக எடுத்து வந்த வார்த்தைகள் பேசப்படமலேயே திரும்புகின்றன; நம் சந்திப்புகளில்! * பூங்காவின் வாசலில் உனக்காக பூ வாங்க அரைமுழம் அதகமாய் அளக்கிறாள் பூக்காரகிழவி! * மூச்சு முட்டும் தொலைவில் நாம் சந்தித்துக் கொள்ளும்பொழுது நீ மூச்சுவிடும் சிலையாகிறாய்; நான் மூர்ச்சையாகிறேன்! * மேல் விழுந்து தங்கும் இலைகளை தட்டிவிடாதே! நம் சந்திப்பிற்கு அதனடியை தேர்ந்ததற்கு நன்றி பகன்று ஆசிர்வதிக்கிறது அம்மரம்! – [...]

Feb 10

அது , அது மட்டுமே காதல்! #10

முத்தம் நம் ஊடல் முறிவுக்கான சமாதான ஒப்பந்தம்! * உன்னை என்னிடம் புதிதாயும் என்னை உன்னிடம் புதிதாயும் தரும் வல்லமை ஊடலுக்கு பின்னான அக்கணத்திற்கே வாய்த்திருக்கிறது! * ஊடல் முறிவு தருணத்தில் உன் கண் தங்கும் ஒற்றை துளி கண்ணீரில் நதி மூலத்துளியின் தூமை! * நம் ஊடலுக்கான சமாதானத்தோடு வருகிறாய்; மெல்ல விடிய தொடங்குகிறது என் மேல் கவிந்த இரவு! * நீ தந்துபோன சில முத்தங்களும் சில புன்னகைகளும் போதுமாயிருக்கிறது; ஊடல் முறித்து திரும்பும் [...]

Older Entries »

FireStats icon Powered by FireStats