Feb 02

அது , அது மட்டுமே காதல்! # 02

Posted by ப்ரியன் on Feb 02 2009 at 10:08 pm

இரட்டை கால்தடங்களை
எங்கு கண்டாலும்
மனம் நிரம்பிவிடுகிறது
கைக்கோர்த்து நாம் நின்றிருந்த
கணங்களால்!

*

மீன்கொத்திகளை
கேட்டிருக்கிறேன்;
உன் கண்கள்
கண்கொத்தி மீன்கள்!

*

தேவதைகளின்
உறைவிடம் விண் மட்டுமல்ல;
சில நேரங்களில்
எதிர் வீடும்!

*

காதல் -
சிலுவை;
யாரும் சுமக்காமல் இல்லை!

*

உருண்டு திரண்டு
வழிய காத்திருக்கும்
உன் ஒற்றை கண்ணீர்துளியினுள்
உறைந்துவிடுகிறது என்னுலகம்!

*

- ப்ரியன்.

அது , அது மட்டுமே காதல்! # 01

3 Responses to “அது , அது மட்டுமே காதல்! # 02”

  1. [...] , அது மட்டுமே காதல்! # 02 , # [...]

  2. [...] , அது மட்டுமே காதல்! #6 , #5 , #4 , #3 , # 02 , # [...]

  3. Om Santhosh says:

    இது எல்லாமே இருப்பதுதான் காதல் . காதலின் பிரிவும் சந்தோசமும் ஒன்றுதான்

Leave a Reply

FireStats icon Powered by FireStats