வெட்கத்தின் மை!

உன் வெட்கத்தின்

மையால்

வரையப்படுகிறது

அந்தி!

*

உன் புன்னகைகளை

மதுக் கோப்பையில்

நிரப்பித் தந்தேன்

தள்ளாடியபடி இருக்கிறது

இதயம்!

*

காதல் மீனுக்கு

பொரி

நீ,நான்!!

*

விரலசைத்து

நீ பேசும்போது

காற்று

ஓர் வீணை!

*

உன்னோடு

நான் இருக்கையில்

உலகின் பரப்பளவு

சில சதுர அடிகள்!

*

நீ சிந்தும்

வெட்கத்தை

சேலையென

உடுத்திக் கொள்கின்றன

என் கவிதைகள்!

 

– ப்ரியன்.

https://www.theloadguru.com/