Archive for June, 2009
June 29, 2009
Filed Under (கென்யா) by ப்ரியன்
நேற்று இரவு விருந்துக்கு client நிறுவன மேலாளர் அழைத்திருந்தார்.நிறுவன வாகனம் வர நேரமாயிற்று நாங்கள் போய் சேர்வதற்குள் அவர் இரண்டு ரவுண்ட் போயிருந்தார்.யார் யாருக்கு என்ன பானம் வேண்டும் என்று கேட்டு ஏற்பாடு செய்தவர்.நானும் இன்னொருவரும் மது பானம் வேண்டாம் என்று சொன்னதற்கு.மது அருந்துபவன் சுரன்(தேவன்) அருந்தாதவன் அசரன் என்று ஆரம்பித்தார், ஓ , முன்னால் சென்ற பானம் தன் வேலையை ஆரம்த்துவிட்டது என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தேன்.
ஆனால் ஆரிய , திராவிட கதைகளைச் சொல்லி இராவணனின் மாண்பு பேசி அவர் முடித்த போது சொல்ல எதுமற்றவனாகி இருந்தேன்.
இங்கு அவர் பூணூல் அணிபவர் என்பது இங்கு தேவையற்ற குறிப்பு.
*_*
வார இறுதிகளில் நீச்சல் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறேன்.இங்கிருக்கும் நாட்களில் அடுத்து கற்க என பட்டியலில் இருப்பது ஹிந்தி யும் சுவாகிலி மொழியும்.ம் என் சோம்பேறிதனத்தில் இது சாத்தியமா? ம்…பார்க்கலாம்…
*_*
இங்கு , சுற்றுலா காலம் ஆரம்பிக்கிறது , கடற்கரையில் வெள்ளை ஆணுடன் கறுப்பினப் பெண் , வெள்ளை பெண்ணுடன் கறுப்பின ஆண் காண்பது சதாரணமாக நிகழ்கிறது.இதுவரை இவர்களுடன் குழந்தைகளை பார்க்காதது ஓரளவு நிம்மதி தருகிறது.
*_*
மிக மந்தமான இணைய வேகத்தின் இடையில் போராடி 4 Minutes தரவிறக்கி இன்று பார்த்தேன்…எதை பாராட்டி எதை விட?…ம்…நான்கு நிமிடங்களை தவறவிடாதீர்கள்…
*_*
June 14, 2009
Filed Under (கென்யா) by ப்ரியன்
கென்யா அரசின் 2009 – 2010 ஆண்டிற்கான வரவு செலவு கணக்கு நேற்று தாக்கல் செய்யப்பட்டது.சாதாரண மக்களின் வாழ்க்கைக்கு ஏதும் உபயோகமற்ற வரவு செலவு கணக்குதான்.அவர்கள் மக்காசோள மாவை தவிர வேறு உணவுக்கு மாற வாய்ப்பளிக்காத வரவு செலவு கணக்கு.ஆனால் , அனைத்து வகை கேமராவுக்கான வரியான 25% சதவீதத்தையும் 16% VAT வரியையும் தள்ளுபடி செய்திருக்கிறது அரசு.கேமரா விலை வெகுவாக குறையும்.பால் அதே லிட்டர் 120 Ksh தான்.
அப்படியே , படபிடிப்புக்கான கட்டணத்தை முற்றிலுமாக நீக்கியுள்ளது இதுவரை காங்கோ வரை வந்த தமிழ் நாயகர்கள் இனி கென்யா வரை வந்து சண்டை போடுவார்கள்.
*-*
நான்காண்டுகளாக அந்தா இந்தா என்று பாவலா காட்டிக் கொண்டிருந்த ஒளி இழை (பைபர் ஆப்டிக்) இணைய இணைப்பு கடல் வழியா அரேபியாவிலிருந்து மாம்பாஸா(கென்யாவின் இரண்டாம் பெரிய , மிகப் பெரிய துறை முக நகரம்) வந்து சேர்ந்துவிட்டது.இனி இணையம் வேகமாகும் மக்கள் வளம் பெறுவார்கள் இதை நான் சொல்லவில்லை.இங்குள்ள அரசியல்வாதிகள்.
*-*
அலுவலகத்திற்கான பயணத்தில் , சகாக்கள் ரஹ்மானின் இசையில் இலயித்திருந்தார்கள்
அந்த போக்குவரத்து விளக்குகான காத்திருப்பில் இன்றைக்கும் தன் வயதுக்கு மீறிய வளர்ச்சி கொண்ட அந்த பெண் பிள்ளை இறுக மூடிய எம் கார் கண்ணாடியை தட்டி பார்வை அற்ற அவளின் தாயை காட்டி காசு கேட்டாள்.தினமும் கவனித்து கொண்டுதான் இருக்கிறேன் ஒரு வயதான மூதாட்டியும் , ஒரு அப்பாவும் பிள்ளையும் , அந்த தாயும் , தொப்பியை பக்கவாட்டில் அணிந்த ஒருவரும் அந்த இடத்தில் தினமும் இருந்திருக்கிறார்கள்.அந்த பெண் , அவள் புதுசு.அந்த தாய்க்கு உதவியாய் வந்திருக்கிறாள்.இதுநாள் வரை அவள் பள்ளியில் இருந்திருக்கலாம். இப்போது சுற்றுலாவுக்கு ஏற்ற காலம் அல்ல…நாளை?! சுற்றுலா காலத்தில் அவளின் வறுமையும் அவளின் வயதுக்கு மீறிய வளர்ச்சியும் அவளை வக்கிர புத்தி கொண்ட ஒரு வெள்ளை மிருகத்திடம் கொண்டு சேர்க்கலாம்…ம் குழந்தை விபாச்சாரம் அவளை நாசமாக்கலாம்.
அப்பிள்ளையின் கண்களை சந்திக்க இயலாமல் தலையை குனிந்துக் கொண்டேன்..ஏனோ கண்ணில் துளிர்த்தது,
*-*
June 14, 2009
Filed Under (கென்யா) by ப்ரியன்
ஜாம்போ பானா,
திட்டவில்லை நண்பர்களே , ‘வணக்கம் தோழா’ என்று சுவாஹிலி மொழியில் விழித்தேன்.இவ்விழையில் ‘கென்யா’ வின் அழகை , வறுமையை அரசியலை , சோகங்களை , என் அனுபவங்களை பார்த்ததை பார்த்த படி எழுத எத்தனிக்கிறேன்.கட்டுரை வடிவில் என் கன்னி முயற்சி என்பதால் மக்களே உங்களின் விமர்னங்களை வேண்டுகிறேன்.சாவா?! (சரியா?! ஓகே?!)
கென்யா – சில புள்ளி விபரங்கள்:
|
|