June 29, 2009
Filed Under (கென்யா) by ப்ரியன்

நேற்று இரவு விருந்துக்கு client நிறுவன மேலாளர் அழைத்திருந்தார்.நிறுவன வாகனம் வர நேரமாயிற்று நாங்கள் போய் சேர்வதற்குள் அவர் இரண்டு ரவுண்ட் போயிருந்தார்.யார் யாருக்கு என்ன பானம் வேண்டும் என்று கேட்டு ஏற்பாடு செய்தவர்.நானும் இன்னொருவரும் மது பானம் வேண்டாம் என்று சொன்னதற்கு.மது அருந்துபவன் சுரன்(தேவன்) அருந்தாதவன் அசரன் என்று ஆரம்பித்தார், ஓ , முன்னால் சென்ற பானம் தன் வேலையை ஆரம்த்துவிட்டது என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தேன்.

 

ஆனால் ஆரிய , திராவிட கதைகளைச் சொல்லி இராவணனின் மாண்பு பேசி அவர் முடித்த போது சொல்ல எதுமற்றவனாகி இருந்தேன்.

 

இங்கு அவர் பூணூல் அணிபவர் என்பது இங்கு தேவையற்ற குறிப்பு.

 

*_*

 

வார இறுதிகளில் நீச்சல் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறேன்.இங்கிருக்கும் நாட்களில் அடுத்து கற்க என பட்டியலில் இருப்பது ஹிந்தி யும் சுவாகிலி மொழியும்.ம் என் சோம்பேறிதனத்தில் இது சாத்தியமா? ம்…பார்க்கலாம்… ;)

 

*_*

 

இங்கு , சுற்றுலா காலம் ஆரம்பிக்கிறது , கடற்கரையில் வெள்ளை ஆணுடன் கறுப்பினப் பெண் , வெள்ளை பெண்ணுடன் கறுப்பின ஆண் காண்பது சதாரணமாக நிகழ்கிறது.இதுவரை இவர்களுடன் குழந்தைகளை பார்க்காதது ஓரளவு நிம்மதி

தருகிறது.

 

*_*

 

மிக மந்தமான இணைய வேகத்தின் இடையில் போராடி 4 Minutes தரவிறக்கி இன்று பார்த்தேன்…எதை பாராட்டி எதை விட?…ம்…நான்கு நிமிடங்களை தவறவிடாதீர்கள்…

 

*_*


Comments:
1 Comment posted on "சுரா – அசுரா"
☼ வெயிலான் on July 4th, 2009 at 12:08 pm #

அருந்தாதவன் அசுரனா? அது சரி.

கென்யாவில் இந்தி எதற்கு பிரியன்?


Post a comment
Name: 
Email: 
URL: 
Comments: