May 30, 2008
Filed Under (புலம்பல்ஸ்) by ப்ரியன்

‘வெற்றி!’

‘இன்று தெரியும்?’

‘விபத்து!’

‘பலி!’

 

இப்படி தினமலர் பாணியில் தலைப்பு வைப்பதானால் விஜயகாந்தின் நேற்றைய அறிவுபூர்வமான அறிக்கைக்கு சட்டென மேலே இட்ட தலைப்புதான் பதிலாய் தோன்றியது.

 

பெரிய தனியார் நிறுவனங்களில் ஊழியர்களுக்கு தனியாக மருத்துவ காப்பீட்டு திட்டம் இருக்கும் நிலையில் அரசாங்க ஊழியர்களுக்கும் இத்திட்டத்தை அரசு கொண்டுவந்திருப்பது மிக நல்ல விடயம்.

 

தலைவர் விஜயகாந்த் அறிக்கையில் தனியார் காப்பீட்டு நிறுவனமான ஸ்டார் ஹெல்த் அண்ட் அலெய்டு நிறுவனத்தின் நெட்வொர்க் மருத்துவமனைகளின் எண்ணிக்கைப் பற்றியும் தரத்தை பற்றியும் கேள்வி எழுப்பி உள்ளார்.அறிக்கை தயாரிக்கும் முன் மருத்துவமனைகளின் பட்டியலை அவர் படிக்கவில்லை போலும்.ஸ்டார் ஹெல்த் அண்ட் அலெய்டு நிறுவனத்தின் நெட்வொர்க் மருத்துவமனைகளான ‘அப்பலோ’ போன்ற மருத்துவமனைகள் தங்களின் தரம் பற்றி பேசிய இவர் மீது வழக்கு தொடர்ந்தால் என்ன செய்வார்?

 

திடீரென உடல் நலம் கெட்டுப்போகிறது அவசரமாய் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டுமாகிறது , கையில் மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டையை மட்டும் எடுத்தச் சென்றால் போதுமானது அம்மருத்துவமனை உங்களுக்கு எந்தவித கட்டணமுமின்றி சிகிச்சை அளிக்கும், மருந்து மாத்திரைகளிக்கு தனியாக செலவழித்தாலும் அந்த ரசீதுகளை காப்பீட்டு நிறுவனத்திற்கு காட்டி பணத்தை மீளவும் பெற்றுக் கொள்ளலாம்.மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படும் முறை இதுதான்.

 

வருடம் ரூ.300/- ல் குடும்பத்தினர் அனைவருக்கும் காப்பீடு என்பது பெரிய விடயம்.தனியாக நாம் காப்பீடு செய்தால் தனி நபருக்கே வருடம் ரூ.2500/- கட்ட வேண்டி இருக்கும்.என்னுடைய நிறுவனத்தில் எனக்கான காப்பீட்டுக்கு வருடம் ரூ.3615/- பிடித்தம் செய்கிறார்கள் , குடும்பத்தினரையும் சேர்ப்பதானால் இன்னும் அதே அளவு செலுத்தவேண்டும். :(

 

–**–

 

பத்தாம் வகுப்பில் மாநில முதல் மதிப்பெண்  496 – ஆம்.என்னுடைய ஆச்சரியம் எப்படி 4 மதிப்பெண்ணை எடுக்காமல் விட்டார் என்பதுதான்

 

வாகனத்தை முந்தும் போது எந்த பக்கம் முந்த வேண்டுமென்றோ அல்லது ஒரு டிடி பார்மை பூர்த்தி செய்யவோ பத்தாவது முடித்த பிள்ளையிடம் கேளுங்கள்.அட!போங்கடா!நீங்களும் உங்கள் கல்வி முறையும்!

 

–**–

 

இந்த வலைப்பூவின் சுட்டி பாலபாரதிக்கு மட்டுமே தெரிந்திருக்கும் வேளையில் நான்கு ஹிட்டுகள் ;) .இது எப்படி சாத்தியம்?!

 

–**–

 

படிக்க :

கென் : நித்யாவும் நானும் ..,

 

–**–


Comments:
2 Comments posted on "பொத்து!"
Mathu on May 30th, 2008 at 6:47 pm #

Mathu click panina kooda hits add aagum


முரளிகண்ணன் on June 1st, 2008 at 6:26 am #

\\வாகனத்தை முந்தும் போது எந்த பக்கம் முந்த வேண்டுமென்றோ அல்லது ஒரு டிடி பார்மை பூர்த்தி செய்யவோ பத்தாவது முடித்த பிள்ளையிடம் கேளுங்கள்.அட!போங்கடா!நீங்களும் உங்கள் கல்வி முறையும்!\\

உண்மை.

தொடருங்கள்


Post a comment
Name: 
Email: 
URL: 
Comments: