June 05, 2008
Filed Under (புலம்பல்ஸ்) by ப்ரியன்

ஊருக்கு போயிருந்தேன் , செல்பேசி அலைகள் காற்றில் கலக்காத இணைய வலையில் சிக்காத கிராமம்.

 

இதமான வெயில் , குளுகுளு காற்று , கடுகடுக்கும் நீர் , சுற்றிவர தென்னையால் மூடிய தோட்டம் சொர்க்கம்.

 

–**–

 

என்றைக்கு நம் ஊர் இரயில் சரியான நேரத்தில் வந்தது அன்று மட்டும் வர , இரவு 9.40 க்கு பூங்கா நகரில் கடைசி பறக்கும் இரயில் சேவை , கோவை இன்டர்சிட்டி வந்து சேரவேண்டி நேரம் இரவு 9.20.சரியான நேரத்தில் கோவை இன்டர்சிட்டி போனால் பறக்கும் இரயிலை பிடித்துவிடலாம் என்று நப்பாசை.ஆனால் , அது வந்து சேரந்ததோ 9.32 க்கு.சரி பேருந்து பிடித்துக் கொள்ளலாம் என்றால் அங்குதான் பிரச்சனையே ஆரம்பம்.

 

முதலில் ஒரு T21 வந்தது நிறுத்தவில்லை.

அடுத்து D51 இவனாவது நிறுத்துவானா?ம்கூம்.

அடுத்து 5C அதே கதை.

அடுத்து இன்னொரு T21 , ஓடிப்போய் ஏறினால் ‘பஸ் டிப்போவுக்கு போகுது சார்’.கெட்ட வார்த்தை வந்தது.என்ன செய்ய துப்பிவிட்டேன்.

அடுத்து வந்த A21 ல் ஏறி வந்து வீடு சேரந்தபோது மணி இரவு 11.10.

 

நல்ல போக்குவரத்து துறை போங்க.

 

–**–

 

தாத்தாவுக்கு பிறந்தநாளாம் , அண்ணாசாலை முழுக்க குழல்விளக்கு.

 

ஆற்காடு வீராசாமி அண்ணே , எப்போ மின்சார தட்டுப்பாடு நீங்குச்சு?!

 

–**–

 

தலைப்புதானே?! அது முத்தமிழ் அறிஞரின் பிறந்தநாளுக்கு பெருங்குடியில் வைத்திருந்த டிஜிடல் பதாகையில் பார்த்தது.

 

–**–

 

படிக்க : ‘நட்புத் தடங்கள்’


Comments:
4 Comments posted on "ஏழைகளின் ஒலிவிளக்கே!"
கென் on June 6th, 2008 at 12:39 pm #

அட ஆற்காடுக்கு வேற வேலை இல்லையா என்ன?

அவர் வீட்டில மின்சாரத்தட்டுப்பாடே வரதில்லையாம் :) ))))))))))


தனசேகர் on June 7th, 2008 at 11:07 pm #

தல .. நானும் இதே போல் ஒரு பதிவு ஆரம்பிக்க நினைத்தேன் .. நம் நினைவுகளை பதிவிட … வழாக்கம் போல் சோம்பேறித்தனம் :( கலக்கலாக இருக்கிறது :)


dhivya v v on June 16th, 2008 at 6:28 pm #

oh!
i agree with you are brave!


venkatramanan on July 16th, 2008 at 8:30 am #

ப்ரியன்!
“பதாகை” என்ற சொல்லை எங்கு பிடித்தீர்கள்? கவிஞர் தாமரையின் MetroPlus நேர்காணலிலிருந்தா? ஏனென்றால் எனக்கு அந்த சொல் பரிச்சயமானது அந்த நேர்காணலை படித்த பின்தான்! ஒரு சுவாரசியத்திற்காகவே கேட்கிறேன்!

அன்புடன்
வெங்கட்ரமணன்!


Post a comment
Name: 
Email: 
URL: 
Comments: