தேங்கி சிறு குட்டை ஆகிவிட்டிருக்கிறது
மே மாத ஓடை
தாவி குதிக்கும் வேகத்தில்
ஓடி ஒளிகிறது தலப்பிரட்டை
உடலெங்கும் உள்புகுந்து
உஸ்ணத்தை வெளியேற்றுகிறது
இரவு தந்துவிட்டுபோன குளிர்கொண்டு
கணம் கணமாய்
பொழுது கழிய
போதும் வெளியே வா என்கிறார் தாத்தா
வெளிறி சுருங்கிய
கை கொண்டு
முகம் வடியும் நீரை துடைக்கையில்
எதிரில்
வெக்கைக்காற்றில்
அசைந்தபடி
காலெண்டரில் ஓடுகிறது
நீல நிற ஓடை.
– ப்ரியன்.