சினேகம்

பெருமழை இரவொன்றில்
மயிர் நிறைந்த என்
மார்பில் முகம்புதைத்தபடி
அந்த கேள்வியை நீ கேட்டாய்

இந்த சினேகம்
இந்த யுகத்தில்தான்
உண்டானதென நினைக்கிறாயா என

இருவரையும் தூக்கி
காலபெருவெளியில் தள்ளியது
அந்த கணம்

இன்றுவரை
யுகங்களும் முடிவதாயில்லை
சினேகமும்.

– ப்ரியன்

Reader Comments

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/