பறத்தல்…Posted November 24, 2013 by ப்ரியன்3 Comments on பறத்தல்… குளிரூட்டப்பட்ட அறை மிதமான வெளிச்சம் ஆடி களித்திட சிறு ஊஞ்சல் நேரம் தவறாமல் கொரித்திட தானியங்கள் கலனில் சுத்திகரிக்கப்பட்ட நீர் அவ்வப்போது அன்பு கொஞ்சல்கள் வேலைப்பாடுடன் கூடிய அழகிய கூண்டு… சிறகு பாரமாகிறது பறத்தலை மறந்த பறவைக்கு… – ப்ரியன்.