அவள் + காதல் = அவன் (07)

காதல் –
கழுத்தை கட்டிக் கொண்டு
பிடிவிட மறுக்கும்
பிடிவாதக் குழந்தை.

மழை நனைய,
பட்டாம்பூச்சி பிடிக்க,
புல் பனித்துளி பருக,
துணை கேட்டு
வீறிட்டு அழுதிருந்தது
அக்குழந்தை.

இரவும் பகலும்
வீறிட்ட அதன் பெருங்குரலால்
நிறைந்திருந்த என்னுலகம்
உன் வருகையால்
விடிகிறது
பேரமைதியாய்!

– ப்ரியன்.

Posts Tagged with…

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/