மோக கணம்

அரைமணி நேரமாச்சு
குளியளறை நுழைந்து
என்ன செய்கிறாய்?இன்னமும்…
சளிப்பிடிக்க போகுது
கொஞ்சிக் கத்திக் கெஞ்சிப் பார்க்கிறாய்…
ம்…ஹ¤ம் வருவதாயில்லை நான்!

தாள்ப்போடா கதவை வேகமாய்
தள்ளி தடுமாறி விழப்போனவளை
தாங்கிக் கொள்கிறேன்!

திட்டிக்கொண்டே பகுதிகுளியலில்
வெளியிழுத்து தலைத்துவட்டுகிறாய்!
ஒரு தாயின் பரிவோடு…

“என்னது நெஞ்சுப்பகுதியில்?”

“நேற்று மோக கணத்தில்
பதிந்த இதழ் சாயமடி என் தங்கமே!”

“ஓ!இது அழியாமல் காக்கத்தான்
இவ்வளவு நேரமா?”
மனம்படித்தவளாய்
“அழுக்கு புருஷா!”
சொல்லியபடி அழுக்கென
துடைக்க துணிகிறாய்!

“ஐயோ!வேண்டாம்!!”

“இது அழுக்குடா!!”

“இல்லையில்லை நாம் கலந்ததுக்கான
அடையாளமடி!!”

“ச்சீய்!அழுக்கான்! சும்மாயிரு” – அதட்டி
மீண்டும் துணிகிறாய்!!

“சரி அழுக்கை
துடைக்காமலே அழகாக்கிவிடு..”

“எப்படி?”
புரியாமல் நீ
நெற்றியில் ஒற்றைக் கேள்வி குறியுடன்!!

“இதழ் அடையாளத்தை
புதுப்பித்து விடடி”

“காலங்காத்தாலே உன்னை…”

வாய் வார்த்தை காற்றில் கலக்கும்முன்
பின்னணைத்து
இதழ் கொண்டு இதழ் மூடுகிறேன்…

திக்கித் திணறி விடுவித்து

அடிக்க துரத்துகிறாய் நீ!!
அடிவாங்க நான் நின்றாலும்
துரத்த முடியாமல் நீ சென்றாலும்

மொத்ததில்
வெகுசீக்கிரத்தில்
நிகழும்
மற்றொரு மோக கணம்!

– ப்ரியன்.

https://www.theloadguru.com/