தூக்கம் விழித்தல்
நிலவும் கூட
உறங்கிப் போன பின்னிரவில்
உறக்கம் கலைந்தது!
என்ன செய்யலாம்?
யோசிக்க இடம் கொடுக்கவில்லை…
உன் அழகு!
விளக்கை எறிய விட்டு
விழியை உன்மேல்
விட்டேன்…
காற்றில் தூரிகையிடும்
ஒற்றை நெற்றி முடி!
மூடிய இமை வழியும்
ஒளி வழங்கும் உன்னிருகருவிழிகள்!
பூக்களுக்கு நிறமி வழங்கத்
துடிக்கும் உதடுகள்!
ரசித்துக்கொண்டெ வந்தவன்
‘சென்சாரில்’ அடிக்கடி சிக்கும்
பாகத்தில் முட்டி நின்ற கணம்
விழித்துக் கொண்டாய்!
புருவம் தூக்கி
‘என்ன இது’ வாசித்தாய்!
புன்முறுவலினூடே! – கவிதை…
எத்துணை அழகு
என் மனைவி!
மொழிந்தேன்!
ச்ச்சீய்!சிணுங்கிக் கொண்டே
அணைத்து
கழுத்துப் பிரதேசத்தில் முத்தமிட்டாய்!
இதற்காகவே அடிக்கடி
தூக்கம் விழிக்கலாம்!