அவள் + காதல் = அவன் (06)

கற்றது கைமண்ணளவு
கண்டது அணுவளவு
உன் அழகில்!

#

உன் அழகு எனும்
சூரிய கீற்றில்
பொழிவிழக்கும்
நட்சத்திரங்கள்
உன் சிநேகிதிகள்!

#

கண்விழியில்
விழுந்து
இதயத்தில் உயிர்தெழுகிறேன்!

#

உன் அழகென்னும்
சமுத்திரத்தை பருகி –
தீர்த்திட முனையும்
சிறுபறவை நான்!

#

உன் விழி தீட்ட தீட்ட
ஒளி பெறுகிறது
என் உயிர் வைரம்!

#

என் பயணம்
உன்னில் தொடங்கி
உன்னில் முடியும்!

#

– ப்ரியன்.

https://www.theloadguru.com/