அவள் + காதல் = அவன் (04)

காய்ந்து கிடந்த
பாறை இடுக்கில்
வேர் பரப்பும்
சிறு விதையாய்;
விரைந்து நிறைகிறாய்
என்னுள்!

#

நீ இல்லா
என் வானம் –
விடிகிறது
நிறமற்று!

#

நீ –
என் உயிர் விருட்சம்
சுமந்து
குறுக்கும் நெறுக்குமாய்
பறந்துத் திரியும்
சிறு குருவி!

#

உன் இமை தப்பிய
பொறியொன்று விழ
பற்றி எறிகிறது
என்
இளமை கானகம்!

#

நீ –
கடவுளரின் பிசாசு
நிசப்தத்தின் பெருங்கூச்சல்
இருளின் ஒளிக்கீற்று!

#

– ப்ரியன்

https://www.theloadguru.com/