ப்ரியன் கவிதைகள்

சில கவிதைகளும்…கவிதைப் போன்ற பலதும்…

நன்றி : நவீன விருட்சம்

பூட்டிய வீட்டினுள்
மெல்ல மெல்ல
உருவம் பெற்று அறை அறையாய்
அலைய தொடங்குகிறது
வீட்டின் தனிமை
விட்டெறிந்த காலுறையின்
நெடி சுவாசித்து
கழிவறையின் மூத்திர
நாற்றம் நுகர்ந்து
நாள்முழுதும் வலம் வந்த அது
பின்னிரவில் திரும்பும்
என் கரம்பற்றி
அமர்த்தி சொல்ல ஆரம்பிக்கிறது
மதியம் ஜன்னல்கண்ணாடிக் கொத்தி
அதனுடன் பேசிச் சென்ற
சிட்டுக்குருவி ஒன்றின் கதையை!

- ப்ரியன்.

பேவு பெல்லா

பேவு – வேப்பம் பூ

பெல்லா – வெல்லம்

கன்னட / தெலுங்கு வருடபிறப்பான(உகாதி) நாளைய தினம் , வாழ்வின் இரு பக்கங்களான சுகம் , துக்கத்தை குறிக்கும் வகையில் சுகத்தினை குறிக்க இனிப்பான வெல்லத்தையும் , துக்கத்திற்கு கசப்பான வேப்பம் பூவையும் கலந்து பேவு பெல்லா தயாரித்து கடவுளுக்கு படைத்து பின் உண்ணுவது கன்னட மக்களின் வழக்கம்.தெலுங்கு மக்கள் இனிப்பு , கசப்பு , உவர்ப்பு , காரம் , துவர்ப்பு , புளிப்பு என எல்லா வகை சுவைகளையும் கலந்து தயாரிப்பார்கள் அதன் பெயர் “உகாதி பச்சடி”.

பேவு பெல்லா செய்முறை :

வேப்பம் பூவையும் பொடியாக்கிய வெல்லத்தையும் கலந்து சிறிது நேரம் வைத்தால் பேவு பெல்லா தயார்.

எங்கள் வீட்டில் , 

வேப்பம் பூவையும் பொடியாக்கிய வெல்லத்தையும் வாழைப் பழத்தையும் சிறிது நெய்யும் கலந்து செய்வார்கள்.எங்கள் கிராமத்தில் இதை பிள்ளையார் கோவிலில் கொடுத்து பலர் கொடுத்ததுடன் கலந்து , பின் நம் பங்கை பிரித்து தருவார்கள்.காலை உணவுக்கு(அநேகமாக இட்லி) முன் வெறும் வயிற்றில் உண்போம்.

தெலுங்கு மக்கள் முறை : உகாதி பச்சடி

  1. வேப்பம் இலை – கசப்பு
  2. மாங்காய் – துவர்ப்பு
  3. உப்பு – உவர்ப்பு
  4. வெல்லம் – இனிப்பு
  5. புளி சாறு – புளிப்பு
  6. மிளகாய் – காரம்

நறுக்கிய வெப்பம் இலை , மாங்காய் , மிளகாய் உடன் சிறிது உப்பு , புளிசாறு , பொடியாக்கிய வெல்லம் கலந்தால் ‘உகாதி பச்சடி’ தயார்.

தமிழனோ , கன்னடனோ , தெலுங்கனோ ,  இந்துவோ , முஸ்லீமோ , உகாதியோ , வேறெரு நாளோ வேப்பம் இலை/பூவை உடலில் சேர்ப்பது நல்லது , இயற்கை தந்த கிருமி நாசினி.பேவு பெல்லா / உகாதி பச்சடி செய்து உண்டு பார்ப்போமே.

 

 

தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான சன் தொலைக்காட்சியின் பணியாளர்கள் நேற்று இலங்கை இராணுவத்தினரால் வவுனியாவில் கைது செய்யப்பட்டு , அவர்களின் சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.பின்னர் அவர்கள் போலீசாரிம் கையளிக்கப்பட்டனர்.

சரியான அனுமதி இல்லாமல் சன் தொலைக்காட்சி இலங்கையில் நடத்தப்படுவதாகவும் , விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் குற்றச்சாட்டு.

மக்களே , இந்த சேதி இந்தியாவின் எந்த ஊடகத்திலும் வரல.அட! அவுங்க செய்தியில கூட இத காணல.இதே சன்  தொலைக்காட்சியின் மீள் ஒளிபரப்பு அலுவலகம் , பிப் 1 அன்று அடையாளம் தெரியாத நபரால் கையெறி குண்டு வீசி தாக்கப்பட்டது நினைவிருக்கலாம்.நம்ம ஊடகத்துக்கு எவ்வளவு பட்டாலும் புத்திவராது.

செய்தி மூலம் : SUN TV employees arrested in Vavuniya

SUN TV employees arrested in Vavuniya

 The police say four local employees of the SUN TV network, a India based Tamil TV network which was operating without a valid license, have been taken into custody together with their equipment in Vavuniya for alleged links with the LTTE.

Police spokesman SSP Ranjith Gunasekera told Daily Mirror the four employees were taken custody by the army yesterday and later handed over to the Vavuniya police for further investigations.

தொடர்புடைய சேதிகள் :

  1. மக்கள் டிவிக்கு இலங்கை அரசு தடை!
  2. நக்கீரனுக்கு ஓர் ஓலை: இந்திய பத்திரிகை ஒன்றிற்கு விடுத்திருக்கும் மிரட்டல்

காதலர்தின வாழ்த்தட்டைகள்…

Stop-the-vanni-genocide

சுவடு…

July 2009
M T W T F S S
« Jun    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

எண்ணுவான்…

விளம்பரம்