Sep
26
* வானம் வெறித்து அமர்ந்திருந்தாள் கிழவி. ஒட்டிய வயிறும் கிழிந்த உடையுமென மண்ணள்ளி தின்றுகொண்டிருந்தது ஓர் பிள்ளை சப்பத்து சப்தம் கேட்டு நடுநடுங்கி விழுந்தான் இளையவன் தூரத்தில் எங்கோ கேட்டது இன்று கண்ணில் பட்டவளின் கதறல் மரமிருந்து இவற்றை மன குறிப்பெடுத்த புத்தனின் அன்னம் சுட்டு வீழத்தப்பட்டது உளவு குற்றம் சுமத்தி துப்பாக்கி வாசத்தோடு வந்தவர்கள் புத்தனின் காதில் ஓதினார்கள் யாவரும் நலமென்று புத்தனும் புன்னகையோடு கேட்டு தலையாட்டினான் அன்னம் திரும்பாததன் பற்றிய கேள்வி எழுப்பகூட திரணியற்று [...]
ஈழம்,கவிதை,நட்சத்திரம்,பொது
Jun
14
நன்றி : நவீன விருட்சம் பூட்டிய வீட்டினுள் மெல்ல மெல்ல உருவம் பெற்று அறை அறையாய் அலைய தொடங்குகிறது வீட்டின் தனிமை விட்டெறிந்த காலுறையின் நெடி சுவாசித்து கழிவறையின் மூத்திர நாற்றம் நுகர்ந்து நாள்முழுதும் வலம் வந்த அது பின்னிரவில் திரும்பும் என் கரம்பற்றி அமர்த்தி சொல்ல ஆரம்பிக்கிறது மதியம் ஜன்னல்கண்ணாடிக் கொத்தி அதனுடன் பேசிச் சென்ற சிட்டுக்குருவி ஒன்றின் கதையை! – ப்ரியன்.
கவிதை,பொது
Jan
13
சென்னைக்கு வந்து முழுதாய் 4 வருடங்கள் ஆகிவிட்டது , அதில் இது 4 வது புத்தக கண்காட்சி.கண்டதை தின்பவன் குண்டாவான் என்பதை யாரோ எனக்கு கண்டதை படிப்பவன் என்று சிறு வயதில் எனக்கு மாற்றி சொல்லி தொலைத்திருக்க வேண்டும் , அதனாலோ என்னவோ புத்தக கண்காட்சி எனக்கு திருவிழா காணும் குழந்தையின் குதூகலத்தை எனக்கு தந்திருந்தது.அம்மை கண்டு படுக்கையில் இருந்தாலும் ப்ரேமின் குறுந்தகவல் கண்டதும் ஞாயிறு (11.01.09) புத்தக கண்காட்சிக்கு முடிவு செய்திருந்தேன்.ஆனாலும் வண்டியில் இருக்கும் பெட்ரோல் [...]
பொது