Category: கவிதை


நீ
தென்றலின்
தீ!

– ப்ரியன்.

துளியாய்
பருகுகிறேன்;
என்னில்
கடலாய்
நிறைகிறாய்…

– ப்ரியன்.

என்
ஆழ் மனக் கேணியை
தூறத் தூற
பிரவாகமெடுக்கின்றன
உன்
ஞாபகங்கள்.

– ப்ரியன்

 

தொட்டனைத்துாறும்
மணற்கேணி;
கட்டியணைத்தூறும்
காதல்.

– ப்ரியன்.

 

Perumazhai

*

மழை சினேகம்
மழை பரிசுத்தம்
மழை குழந்தை
நீ
குழந்தையின் பரிசுத்தமான சினேகம்.

– ப்ரியன்.

*