Archive for the 'வாழ்த்து' Category

Jun 30

நிலவு நண்பனுக்கு ஒரு வாழ்த்துக் கவி!

‘வால்’நட்சத்திரத்தை வாழ்த்தும் மின்மினி நிலவிலிருந்து கைப்பிடிமண் கொண்டுவந்தமைக்கேகும்மாளமிடுவோர் மத்தியில்!அமைதியாய் ஒரு நிலவையேதன் சொந்தமாக்கி குடிப் புகுகின்றான்இவன் இன்று!*இதுநாள்காறும்பூமியாய் நின்றுநிலவை ரசித்திருந்தவன்;நாளைமுதல் நிலவின் கைப்பிடித்துஇராட்டிணம் சுற்றப் போகிறான்திருமண வானில்!*தமிழன்னையின் கழுத்தில்கைக்கட்டி கவிபடித்தபிள்ளையின்கழுத்தோடு கைகள் பூட்டிகாதல் மொழிபேசக்காத்திருக்கிறாள் தோழி!*அதனாலேயேஇனிஞானியின் கவி கூடும்எனக் காத்திருக்கிறோம்ரசிகவின் ரசிகர்கள்நாங்கள்!*அன்புடனின்‘வால்’நட்சத்திரத்தைவாழ்த்தும் பெரும் அன்புநட்சத்திரக்கூட்டங்களுக்கு மத்தியில்வாழ்த்தி நிற்கிறேன் – நானும்ஓர் சின்ன மின்மினியாய்!*என்றென்றும் முழு நிலவாக‘ஜஹான்’ ஒளி வலம் வரட்டும்ஞானியின் வாழ்வில்!நிலவொளி மழையில்நனைந்து நனைந்துஇன்னும் ஞானம் கூடட்டும் ‘ஞானி’க்கு!* அன்புடன்,ப்ரியன்.

Jun 28

கலியாணத்துக்கு போறேனுங்கோ…

நிலவு நண்பனின் நீ எனக்கு வேண்டாமடி கவிதையை நான் முதல் முதலில் வாசித்தது வாரமலரில் என்று நியூரான்கள் சொல்கின்றன.அப்போதுதான் நான் கவிதைகள் வாசிக்கவும் கொஞ்சம் எழுதவும் கற்றுக் கொண்டிருந்தேன்.வாசித்ததும் எனக்கு மனதில் தோன்றியது ‘அட!’.அதற்கப்புறம்,எழுதியவர் பெயர் மறந்துவிட்டாலும் மனதுக்குள் நாற்காலிப் போட்டு அமர்ந்துவிட்டது அக்கவிதை. நல்லதொரு பணியில் அமர்ந்தப் பிறகுதான் கவிதைகள் என்ற தவம் உடைந்த தினங்களில்,அடிக்கடி நண்பர்கள் வாயிலாக மின்னஞ்சல் தட்டி நிற்கும் எழுதியவர் பெயரில்லாமல் நிலவு நண்பன் ஞானியின் கவிதைகளும்,நிலா ரசிகனின் கவிதைகளும்.அட!யார்ரா இவுங்க [...]

Mar 08

பெண்மையே உன்னை போற்றுதும்

அன்புக்கு அம்மா!ஆசைக்கு மகள்!பாசத்திற்கு தங்கை!நேசத்திற்கு மனை!எப்பெயர் நீ கொளினும்அதுவாகவே ஆகிப்போகிறாய் நீ!உன்னாலேயே அர்த்தம் பெறுகின்றனஅவ்வுறவுகள்! பொறுமைக்கு நீயெனபூமிக்கு உன்னை குறித்தோம்!நடக்கும் வழியெல்லாம் தாயுள்ளமாய்தழுவிச் செல்லும் நதிக்கும்உன்னை வைத்தோம்! * மகனாக்கிதமயனாக்கிதகப்பனாக்கிநண்பனாக்கி * (நன்றி பரநீதரா)இன்னும் பலவாக்கிஉலகுக்கெல்லாம்எம்மைஅடையாளம் காட்டியவளே! உன்னில் என்னில் என்று பிரபஞ்சத்தின்ஒவ்வொரு துளியிலும்நீ நிறைந்து நிற்கும்பண்பாலேஇவ்வுலகம் நிலைத்திருக்க செய்தவளே! பெருமைமிகுபெண்மையேஉன்னைப் போற்றுதும்!

Older Entries »

FireStats icon Powered by FireStats