கடிதம் கை சேரும் கணம்

ஊனமான நெஞ்சம் மெல்ல
தத்தித் தத்தி
தாவும்!

இயலாமையில் தீக்கிரையாக்கிய
என் கவிதைகள்
கொஞ்சம் சிறகு
முளைத்துப் பறக்கும்!

அறுப்பட்ட வீணை மனதில்
மெல்லிய கீதம்
இசைக்கப் படும்!

எரித்துத் தொலைக்கும்
என் வீட்டு நிலவு
குளிர் பரப்பும்!

என் காதல் வால்
முளைத்துத்
தாவித் திரியும்!

இத்தனையும் நடக்கும்!
ஊடல் உருகி
கூடலாகும் போது
அனுப்புவாயே
ஒரு கடிதம்!
அது வந்துச் சேரும் கணம்!

– ப்ரியன்.

Reader Comments

  1. ப்ரியன்

    நன்றி முகில் ‘அறுபட்ட’ என திருத்தியமைக்கு நன்றிகள்

  2. துடிப்புகள்

    ‘அறுப்பட்ட’ அல்ல… ‘அறுபட்ட’.. சரியா?

    ஆஹா.. கடிதம் வந்துடிச்சி போல!

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/