#
நீ வாசல் கடக்கையில்
கவர்ந்த வாசனையை
பூசிக் கொண்டு மலர்கிறது
கொல்லைபுற மல்லி!
#
உயிரற்ற செல்களலாக்கப்பட்ட
உரோமங்கள்
உயிர் பெற்று
குத்தாட்டம் போடுகின்றன;
உன் தாவணி ஸ்பரிசத்தில்!
#
தென்றலை ஒத்த
நடைபயின்று கடந்துச் செல்கிறாய்;
ஆயிரம் சூறாவளிகளை
என்னுள் உருவாக்கிவிட்டு!
#
என்னுடன் ஓடிவருவதானால் –
வீட்டையும் தூக்கிக் கொண்டு வா!
உன்னோடு இருபது வருடம்
வாழ்ந்த அதனோடு
இருபது நாட்களாவது
வாழ வேண்டும் எனக்கு!
#
தலை சூட
நீ மல்லி சேகரிப்பதுப் போல;
என் உயிர் சூட
உன் புன்னகை சேர்க்கிறேன்
நான்!
– ப்ரியன்
Reader Comments
kavithaikal nandru.
\\என்னுடன் ஓடிவருவதானால் –
வீட்டையும் தூக்கிக் கொண்டு வா!
உன்னோடு இருபது வருடம்
வாழ்ந்த அதனோடு
இருபது நாட்களாவது
வாழ வேண்டும் எனக்கு!\\
ஓடி வந்தாலும், சீர் கொண்டு வர மறந்துடாதே ன்னு காதலி கிட்ட சொல்றாப்ல இருக்கு,
Just kidding!
\\தலை சூட
நீ மல்லி சேகரிப்பதுப் போல;
என் உயிர் சூட
உன் புன்னகை சேர்க்கிறேன்
நான்!\\
அருமையிலும் அருமை இந்த வரிகள்!!
வணக்கம் ப்ரியன்..கவிதைகள் அனைத்தும் நன்றாக இருக்கிறது…..தொகுப்பு கொண்டு வாறுங்கள்………..புத்தகமாக பார்க்க ஆசையாக இருக்கிறது..
வாழ்த்துக்களுடன்
வீரமணி
உங்களின் கவிதைகள் வெகு அருமை!
இவ்வரிகள், அவளையும் தாண்டி , அவளை சாரந்த அஃறிணைகளையும் விரும்பும் , அவனின் அளவு கடந்த காதல் நிலையை குறிக்கிறது…
Purinthathu nanpare – naam kathalikum pothu aval/avan thottathellam avarkal sampanthapatta anaithum namakku oru ulagil illatha visayamagathaan thonum – intha sense il correct
but what i felt, aval vazhntha veedu aval illamala – appa aval veedu mattum thaana vendum enta purithalil appadi eluthiveitten
vijai
//அருட்பெருங்கோ said…
ப்ரியன்,
கவிதைகள் வழக்கம்போல அழகு.
இன்றைக்கு சிறப்பு கவிதைகள் வருமென்று கேள்விப்பட்டேனே 😉 எதுவும் இல்லையா? //
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
~~
அருட்பெருங்கோ @
இன்றைக்கு சிறப்பு கவிதைகள் வருமென்று கேள்விப்பட்டேனே 😉 எதுவும் இல்லையா?
~~
ஆகா, நீங்களுமா அருட்பெருங்கோ??
~~
எழில் @
அருமையான கவிதைகள்
விக்கி…..
~~
நன்றி எழில்
~~
தூயா @
மழைதூறல் போல..ரசித்தேன் 🙂
~~
நன்றி தோழி…
்ரியப்ரியன்,
கவிதைகள் வழக்கம்போல அழகு.
இன்றைக்கு சிறப்பு கவிதைகள் வருமென்று கேள்விப்பட்டேனே 😉 எதுவும் இல்லையா?
/*
ennathu, kaathaliyodu kudithanam nadatha 20 days thana – appadina mokam 30 naal
aasai 60 vathu naal enparkale –
unkal logic padi 20 days only.
*/
வணக்கம் அனானி,
இதில் எங்கு ஆசை அறுபது நாள் லாஜிக் வந்தென்று தெரியவில்லை…
~~
உன்னோடு இருபது வருடம்
வாழ்ந்த அதனோடு
இருபது நாட்களாவது
வாழ வேண்டும் எனக்கு!
~~
நன்றாகப் படித்துப் பாருங்கள்…
இவ்வரிகள், அவளையும் தாண்டி , அவளை சாரந்த அஃறிணைகளையும் விரும்பும் , அவனின் அளவு கடந்த காதல் நிலையை குறிக்கிறது…
enna priyan puthusa eluthirinka
avalidam irunthu vasanaiyai poosikonda mallikai malarnthu vasam tharukirathu – pavam mallikai athukku ippadi oru nilaiyaa
Oru Sooravalikke thaangathu idhayam
ithula, aayiram sooravaliya.
ennathu, kaathaliyodu kudithanam nadatha 20 days thana – appadina mokam 30 naal
aasai 60 vathu naal enparkale –
unkal logic padi 20 days only.
rasikalam ppa
vi
அருமை..
மழைதூறல் போல..ரசித்தேன் 🙂
அருமையான கவிதைகள்
விக்கி…..
என்னை மிகவும் கவர்ந்த வரிகள்
“தலை சூட
நீ மல்லி சேகரிப்பதுப் போல;
என் உயிர் சூட
உன் புன்னகை சேர்க்கிறேன்
நான்!”