*
வானம்
வெறித்து அமர்ந்திருந்தாள்
கிழவி.
ஒட்டிய வயிறும்
கிழிந்த உடையுமென
மண்ணள்ளி தின்றுகொண்டிருந்தது
ஓர் பிள்ளை
சப்பத்து சப்தம்
கேட்டு நடுநடுங்கி விழுந்தான்
இளையவன்
தூரத்தில் எங்கோ
கேட்டது இன்று
கண்ணில் பட்டவளின்
கதறல்
மரமிருந்து இவற்றை மன குறிப்பெடுத்த
புத்தனின் அன்னம்
சுட்டு வீழத்தப்பட்டது
உளவு குற்றம் சுமத்தி
துப்பாக்கி வாசத்தோடு
வந்தவர்கள் புத்தனின்
காதில் ஓதினார்கள்
யாவரும் நலமென்று
புத்தனும் புன்னகையோடு
கேட்டு தலையாட்டினான்
அன்னம் திரும்பாததன்
பற்றிய கேள்வி எழுப்பகூட திரணியற்று
– ப்ரியன்.
Reader Comments
Very Nice kavithai..
so nice
the poem target to the inner feelings of indian culture
//மண்ணள்ளி தின்றுகொண்டிருந்தது//
Mann aalum naal arug’ennga ellai ennru….
🙁
:(((
– திரானியற்ற இன்னொரு தமிழன்
யாரும் நலம்னு தகவல் எப்போதான்வரும்???