தேங்கி சிறு குட்டை ஆகிவிட்டிருக்கிறது
மே மாத ஓடை
தாவி குதிக்கும் வேகத்தில்
ஓடி ஒளிகிறது தலப்பிரட்டை
உடலெங்கும் உள்புகுந்து
உஸ்ணத்தை வெளியேற்றுகிறது
இரவு தந்துவிட்டுபோன குளிர்கொண்டு
கணம் கணமாய்
பொழுது கழிய
போதும் வெளியே வா என்கிறார் தாத்தா
வெளிறி சுருங்கிய
கை கொண்டு
முகம் வடியும் நீரை துடைக்கையில்
எதிரில்
வெக்கைக்காற்றில்
அசைந்தபடி
காலெண்டரில் ஓடுகிறது
நீல நிற ஓடை.
– ப்ரியன்.
Reader Comments
I need a கவிதை about ஒனட
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…
மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்… நன்றி…
அறிமுகப்படுத்தியவர் : கிரேஸ் அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தேன் மதுரத் தமிழ்!
வலைச்சர தள இணைப்பு : http://blogintamil.blogspot.in/2014/03/blog-post_9.html