காதல் துலாபாரம்!

*
நீ பறித்து சூட
பூத்திருக்கிறது
என்னுள் காதல்!
*
குடை விட்டெறி!

உன்னில்
நனைந்திடத்தான் பொழிகிறது
மழை.

*
காய்வதேயில்லை!

நீ தந்த
முத்தங்களின் ஈரம்!

*
காதுகளுக்கு
உன் பேச்சிசை!
கண்களுக்கு
உன் பேரழகு!
நாசிக்கு
உன் சுகந்தம்!
தேகத்திற்கு
தொடுகை!
என்ன பாவம் செய்தது
உதடுகள் மட்டும்;
வா!முத்தமிட்டுப் போ!
*
நான் ஒரு பக்கம்
உன் உடைந்த  
கண்ணாடி வளையல் துண்டுகள்
ஒரு பக்கம்!

சமனாகி விடுகிறது
காதல் துலாபாரம்!

– ப்ரியன்.