காதல் துலாபாரம்!

*
நீ பறித்து சூட
பூத்திருக்கிறது
என்னுள் காதல்!
*
குடை விட்டெறி!

உன்னில்
நனைந்திடத்தான் பொழிகிறது
மழை.

*
காய்வதேயில்லை!

நீ தந்த
முத்தங்களின் ஈரம்!

*
காதுகளுக்கு
உன் பேச்சிசை!
கண்களுக்கு
உன் பேரழகு!
நாசிக்கு
உன் சுகந்தம்!
தேகத்திற்கு
தொடுகை!
என்ன பாவம் செய்தது
உதடுகள் மட்டும்;
வா!முத்தமிட்டுப் போ!
*
நான் ஒரு பக்கம்
உன் உடைந்த  
கண்ணாடி வளையல் துண்டுகள்
ஒரு பக்கம்!

சமனாகி விடுகிறது
காதல் துலாபாரம்!

– ப்ரியன்.

 

Reader Comments

 1. kavithan

  Dear priyan

  i am kavithan from Doha

  ungal kavithaigal aanaoththum ungal peyar pola ennul priyamagavum piriyamalum irukkirathu

  thanks and regards
  dkavithan

 2. priya

  நான் ஒரு பக்கம்
  உன் உடைந்த
  கண்ணாடி வளையல் துண்டுகள்
  ஒரு பக்கம்!

  சமனாகி விடுகிறது
  காதல் துலாபாரம்!

  அழகான வரிகள் !!

 3. priya

  நான் ஒரு பக்கம்
  உன் உடைந்த
  கண்ணாடி வளையல் துண்டுகள்
  ஒரு பக்கம்!

  சமனாகி விடுகிறது
  காதல் துலாபாரம்!

  அழகான வரிகள் !!!!!!!!

 4. U.P.Tharsan

  // நான் ஒரு பக்கம்
  உன் உடைந்த
  கண்ணாடி வளையல் துண்டுகள்
  ஒரு பக்கம்!

  சமனாகி விடுகிறது
  காதல் துலாபாரம்! //

  அடடா.. அது எப்படி? :-))

 5. தனசேகர்

  விக்கி ,
  கவிதையில் காதல் ரசம் சொட்டுகிறது !! எப்படி இருக்கிறது புது அலுவலகம் ?

 6. யெஸ்.பாலபாரதி

  //முரளிகண்ணன் Says:

  April 7th, 2008 at 8:12 pm
  இந்த கவிதைகளை பாலாபாய் படிக்கிறாரா? படித்திருந்தால் ஏப்ரல் 1 க்கு தேவையே இல்லையே?
  //

  தல… இப்படி ஒரு பின்னூட்டத்தை முரளிகண்ணனிடம் போடச்சொன்னது நீங்க தான?

  கிடைக்குற எடத்திலெல்லாம் சங்கத்தை நடத்துவேன்னு அடம்பிடிச்சா எப்படி? கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

 7. எழில்பாரதி

  ப்ரியன் கவிதைகள் அனைத்தும் அருமை!!!!

  எல்லா கவிதைகளும் அசத்தலா இருக்கின்றன….

  வாழ்த்துகள்!!!!

 8. Ken

  குடை விட்டெரி! விட்டெறி

  ம்ம் கொடுத்து வச்சவன்டா நீ வேறென்ன சொல்ல :))))))))))))

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/