* வீடு *

மொத்தம் எட்டு அறைகள்
பழைய சாமான்கள் போட்டுவைக்கும் அறையும்
நெல்மூட்டை அடுக்கிவைக்கும் அறையும்
அறை கணக்கில் அடக்கமில்லை!
அக்கா
வீட்டுக்கு வெளியே இருக்கும்போது
துணைக்கு அம்மாவும்
நீட்டிப் படுத்துறங்க
அகலமானதொரு திண்ணை!
வருடத்திற்கு ஒருமுறை
நான்கு ஏக்கரில் விளையும்
மிளகாய் காயவைக்க
வசதியான திடல்!
அக்காவிற்கும் அம்மாவிற்கும்
மல்லிகைப் பூ;
அவசர சமையலுக்கு முருங்கை தர
அளவாய் ஒரு தோட்டம்!
வெளியே போக மட்டும் காடு;
மற்றப்படி குளியல் அறை என்று ஒன்று தனியாக இருந்தது;
எங்கள் கிராமத்துவீட்டில்!
அவ்வீட்டை விற்றப் பணத்தில்
வாங்க முடிந்தது இங்கு
எட்டுக்கு எட்டில் இரண்டு அறையும்
பத்துக்கு எட்டில் ஒரு வரவேற்பு அறையும்
இணைந்த குளியலறையும்!

– ப்ரியன்.

Reader Comments

  1. ப்ரியன்

    நன்றி செந்தில் இன்னமும் அவை என் பாட்டி வீட்டில் காண கிடைப்பது என் பாக்கியம்

  2. யாத்திரீகன்

    சொல்ல வந்த கருத்து.. ரொம்பவே அருமை..

    திண்ணை, முற்றம், காடு, பழைய சாமான் அறை.. இதெல்லாம் பாத்தே ரொம்ப நாளாச்சு.. கூடிய சீக்கிரம் இதெல்லாம் அருங்காட்சியகத்துல வைக்கனும்..


    செந்தில்/Senthil

  3. அன்பு

    அன்பு ப்ரியன்,

    நான் ஏற்கனவே அன்புடன் கூறியதுபோல,

    அருமையான கவிதை.

    என்னை பொதுவாக ஈர்ப்பட்து
    கவிதைக்காக வலிய எழுதும்
    சொற்கள் அல்ல –
    நிதர்சனத்தைப் பேசும்
    கவித்துவமான வரிகள்தான்..

    அந்த வகையில்… உங்களின்
    இந்தக்கவிதை என்னை மிக
    ஈர்த்தது. நன்றி.

  4. ப்ரியன்

    நன்றி முகில்.வார்த்தைகள் அழகுப்படுத்தினால் செல்ல வந்தது சரியாக புரியப்படாமல் போய்விடுமோ என்ற பயத்தில் மனதில் தோன்றியபடியே தட்டச்சிவிட்டேன் முகில் 🙂

  5. துடிப்புகள்

    நல்ல கருத்து. வார்த்தைகளை இன்னும் கொஞ்சம் அழகு படுத்தியிருக்கலாமென்பது என் தாழ்மையான கமெண்ட்!

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/