கண்ணீரின் மழை…

மண் நான்

மழை நீ

வா,

பொழிந்துவிட்டுப் போ!

*

நீ

என் கண்ணீரின்

மழை!

*

நீ

கண்ணீரின்

கனமானவள்;

மழையின்

அழகானவள்!

*

நீ

நனைய நனைய

குடையாகிறது

மழை!

*

நனைந்திருந்து திரும்பும்

உன்னில்

திட்டு திட்டாய்

வானம்!

*

மார்போடு சேர்த்தணைத்த

அந்நாளில்

உலகெல்லாம்

ஒரே மழையாக இருந்தது!

*

வானம்

உன் மேல் எழுதும்

கவிதைக்கு

மையாகிறது மழை!

*

நீ சாய்ந்துக் கொள்ள

சிலிர்ப்பில்

துளி துளியாய்

வானம் உதிர்கிறது

மழை நனைந்த மரம்!

*

வா,

நனைவோம்

கரைவோம்

மீண்டு

மழையோடு மழையாக

பொழிவோம்!

*

நீ

நனைய

மழை குளிக்கிறது

உன்னழகில்!

*

நீ

எவ்வளவு நனைந்தாலும்

கரையா

சர்க்கரைக்கட்டி!

*

நீ நனைய

என்னில்

காமக் காய்ச்சல்!

*

நனைந்தாலும்

உரசலில் பற்றிக் கொள்ளவே செய்கிறது

உடல் தீக்குச்சிகள்!

*

– ப்ரியன்.