அவள் + காதல் = அவன் (05)

என்
காதலை
அடைக்காக்கிறாய்!

பொறிந்து
பறக்கிறது அது
இலக்கற்று சிறகு விரிக்கும்
சிறுபட்சியாய்!

மனம் கொத்தி தின்று
உயிர் வளர்க்கும் அதன்
சூடான
எச்சத்திலிருந்து
வளர்ந்தெழுகிறது
ஒரு கவிதை காடு!

கணநேரமும் சீண்டிவிட்டு
உன் கூந்திலில் புகுந்து
கண்ணாமூச்சி காட்டும்
அதன் மீதான சலிப்பு
சல்லி சல்லியாகிறது
சன்னமாக
காதோரம் கீச்சிவிட்டு
செல்லும் உன் பெயரின் இனிமையில்!

– ப்ரியன்.

https://www.theloadguru.com/