வெட்க மீன்கள்

Vettka_Meengal

 

வெட்க மீன்கள்
———————

நீ
அழகின் குழந்தை;
உனக்கு கவிதை மாலை சூட்டி
அழுகு பார்க்கிறது
என்
தமிழ் குழந்தை.

*

என் கோபத்தை
மொத்தமாய் கழுவிச் செல்லும்
வீரியம் – உன்
ஒற்றை கண்ணீர் துளிக்கு.

*

சந்திப்பின் முடிவில்
பிரிகிறோம்
அடுத்த சந்திப்பிற்கான
ஆயுத்ததோடு.

*

நீ தொட்டுச் செல்லும்
பாகங்களில்
குவிகின்றன மொத்தமாய்
உணர்வு செல்கள்.

*

எறும்புகளுக்கு
அரிசி கோலம்;
என் கண்களுக்கு
நீ!

*

எந்த கதகதப்பிலும்
காய்வதே இல்லை
நீ
தந்த முத்தத்தின் ஈரங்கள்.

*

ஊடல் மெளனங்கள்
காதல் புத்தகத்தின்
கறுப்பு பக்கங்கள்

*

உன் மெளனத்தின்
பாரத்தில் மீளவியலா ஆழத்தில்
அமிழ்ந்து போகிறேன் நான்.

*

நீ கையை பிடித்துக்கொண்டு
உள்ளங்கை ரேகைகளில் வரையும் கவிதைக்கு
ஒப்பானதாய்
படைக்கப்படவில்லை இன்னும் எதுவும்.

*

கை கோர்த்து அமர்கையில்
பரப்பளவில் சுருங்கும் உலகம்
பிரிகையில் சட்டென விரிந்து படர்கிறது.

*

உன் வெட்கத்தை
கையமர்த்தி அமர வைப்பதற்குள்
முடிந்துவிடுகிறது நம் சந்திப்பு.

*

உன் கன்னக்குழிக்குள்
பிடித்துக் கொண்டிருக்கிறேன்
வெட்க மீன்களை.

*

ஊடலுக்கு பின்னான
சிணுங்கல்களை
கேலி பேசுகின்றன
ஊடலின் போதான மெளனங்கள்.

*

உன்
ஒரப்பார்வை
எழுதிச் செல்கிறது
ஓராயிரம் கவிதைகளை.

*

Reader Comments

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/