அவள் + காதல் = அவன் (03)

நின் ஓரப்பார்வையில்
உயிர் கூடு திறந்து
பறக்கத் தொடங்குகிறேன் –
முன்
விரிகிறது
முடிவிலா வனமொன்று!

#

கடலாடும் மழலையின்
பாதம் கொஞ்சும் அலையின்
குறும்பை ஒத்தது
என்னை
சீண்டி
நகரும் உன்
ஓரப்பார்வை!

#

உன் சிக்கிமுக்கி
ஓரப்பார்வை
பற்ற வைக்க
கற்பூரமாய்
எரிகிறேன்
காதலின் ஆலயத்தில்!

#

இதயமெங்கும் – உன்
ஓரப் பார்வை
தைத்த
காயத்தின் தழும்புகள்.

#

பெருங்குளிர் காலத்தின்
பின்னிரவில் வீசும் ஊதக்காற்றில்
சிறிகுஞ்சை
சிறகிடையில் அணைக்கும்
தாய் பறவையாய் –
அடைகாய்க்கிறேன்
உன் நினைவுகளை!

#

Posts Tagged with…

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/