அவள் + காதல் = அவன் (02)

நீரின்றி அல்ல
நீயின்றி
அமையாது
எனது உலகு!

#

உயிர் சிலிர்க்க
பொழிந்துவிட்டு போகும்
கருமேகம் நீ!

#

தீக்கோலிட்ட
புல்லாங்குழலினது ரணத்தோடு
காத்திருக்கிறேன்

ஓர் குளிர் கால நள்ளிரவில்
நீ ஏந்தி
வாசிப்பதற்காக!

#

இறைவன் எனும்
குழந்தை செய்த
பிழை நான்;

திருத்தி எழுதும்
ஆசிரியை நீ!

#

என் நிசப்தத்தை கலைத்து
பெருங்குரலில்
கத்துகிறது உன் மெளனம்!

– ப்ரியன்.

Posts Tagged with…

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/