வரிசை தப்பிய எறும்பு ஒன்று
என்னருகே ஊர்ந்து வந்தது!
அச்சின்ன உடல் பெரிதாக
ஆட ஆட என் மேலேறுகிறது
அவ்வெறும்பு!
நகர்ந்தால் நசுங்கிவிடுமென
சுட்டுவிரலில் எட்டி எடுக்கிறேன்!
பிரயோகித்த சின்ன வேகத்தில்
பற்றிய ஒற்றை தானியம் தொலைக்கிறது
அவ்வெறும்பு!
தொலைத்த தானியம் தேடும்
அதனை கைக்குள் மூடி
தானியம் தேடி எடுத்து அருகில்
கொண்டுச் செல்லும் நேரம் கவனிக்கிறேன்
மூடிவைத்த கஷ்டத்திலோ,
தானிய நஷ்டத்திலோ
கடிக்கத் தயாராகிறது
அவ்வெறும்பு!
பாட்டி சொன்ன
கடித்த எறும்பு மரித்துப் போகும்!
தகவல் மனதில் முந்தி நிற்க
எறும்பை தரையில்விட்டு
தானியம் அருகில் வைத்தேன்
அவ்விடமே நின்று சுற்றிச் சுற்றி வந்த
அவ்வெறும்பு தானியத்தை
நான்கு முறைச் சுற்றி
பின் பக்கம் வந்து
சுமந்து நகர்ந்தது!
என்னைக் கடித்தலை மறந்து!
கண்டிப்பாக
நான் – மனிதன்
அவ்வெறும்பாக
இருந்திருந்தால்
தானியம் விட்டு
கடித்துதான் நகர்ந்திருப்பேன்!
– ப்ரியன்.
Reader Comments
ம் நிவி சொன்னா .:)
ஓ !!! இரண்டு வருடமா.. பாவம் ப்ரியா 🙂
பன் பற்றி தெரியும்… , காரணம்.. உங்கள் வகுப்புத்தோழிகள் சிலர் எனக்கு திருவனந்தபுரத்தில் அறிமுகம், கல்கத்தாவில் உடன் பணிபுரிந்தனர்….
நான் திருமணத்திற்கு செல்லவில்லை செந்தில் விடுமுறை இல்லை 🙁 …பன் உங்கள் tranin batch -a ?
அவர்களுடை திருமணம் காதல் திருமணம் தான்…எனக்கு இன்னமும் 2 வருடமாவது ஆகும் 🙂
ஹா ஹா ஹா…
நகைச்சுவையாக இருந்தாலும்… மிகவும் நல்ல கருத்து.. ப்ரியன்…,
அப்புறம்.. உங்க கல்லூரி வகுப்புத்தோழர்கள் திருமணத்திற்கு போனீங்களா ?? காதல் திருமணம்தானே அது ?!!?! சரி உங்களுது எப்போ ????