கன்னத்தில் முத்தம்

எனக்கு
கவிதையெல்லாம்
எழுத தெரியாதென்றபோது
கன்னத்தில்
அழுத்தமாய் ஆழமாய் அழகாய்
முத்தமிட்டு இப்போது
எழுதென்றாய்!

இப்போதும் சொல்கிறேன்
உன் இதழ் என் கன்னத்தில்
எழுதிய அளவுக்கு
எனக்கு கவிதை எழுத வராது!

– ப்ரியன்.

Reader Comments

 1. ப்ரியன்

  நன்றி ராகினி வந்தமைக்கும் விமர்சனம் தந்தமைக்கும்

 2. tamilmagani

  ரொம்ப நல்லாருக்கு. அழகான அழுத்தமான கவிதை.. கவிதை என்று சொல்வதைவிட காதல் கல்வெட்டுகள் எனலாம்!! நன்று!

  பிரியமுடன்
  தமிழ்மாங்கனி

 3. ப்ரியன்

  * அடடா “இச்” என்று இருக்கு 🙂 *

  நன்றாக பாருங்கள் நித்தியா கொஞ்சம் ஈரமாகவும் இருக்கும்

 4. ப்ரியன்

  நன்றி ரசிகவ்..சிறப்பான மறுமொழி கவிதைக்கு 🙂

 5. நித்தியா

  அடடா “இச்” என்று இருக்கு 🙂

  நேசமுடன்..
  -நித்தியா

 6. நிலவு நண்பன்

  எனக்கு
  அடிவாங்கியெல்லாம்
  பழக்கமில்லை என்றபோது
  நீ உன் அண்ணனை விட்டு
  பிரு பிரு வென்று என்னை
  பிருத்துவிட்டுச் சென்றாய்

  இப்பொழுது பாரேன்
  போலிஸ் அடி கூட
  வலிக்கவில்லையடி..

  அன்புடன்

  ரசிகவ் ஞானியார்

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/