நிலவு நண்பனுக்கு ஒரு வாழ்த்துக் கவி!

‘வால்’நட்சத்திரத்தை வாழ்த்தும் மின்மினி

நிலவிலிருந்து கைப்பிடி
மண் கொண்டுவந்தமைக்கே
கும்மாளமிடுவோர் மத்தியில்!
அமைதியாய் ஒரு நிலவையே
தன் சொந்தமாக்கி குடிப் புகுகின்றான்
இவன் இன்று!
*
இதுநாள்காறும்
பூமியாய் நின்று
நிலவை ரசித்திருந்தவன்;
நாளைமுதல் நிலவின் கைப்பிடித்து
இராட்டிணம் சுற்றப் போகிறான்
திருமண வானில்!
*
தமிழன்னையின் கழுத்தில்
கைக்கட்டி கவிபடித்த
பிள்ளையின்
கழுத்தோடு கைகள் பூட்டி
காதல் மொழி
பேசக்காத்திருக்கிறாள் தோழி!
*
அதனாலேயே
இனி
ஞானியின் கவி கூடும்
எனக் காத்திருக்கிறோம்
ரசிகவின் ரசிகர்கள்
நாங்கள்!
*
அன்புடனின்
‘வால்’நட்சத்திரத்தை
வாழ்த்தும் பெரும் அன்பு
நட்சத்திரக்கூட்டங்களுக்கு மத்தியில்
வாழ்த்தி நிற்கிறேன் – நானும்
ஓர் சின்ன மின்மினியாய்!
*
என்றென்றும் முழு நிலவாக
‘ஜஹான்’ ஒளி வலம் வரட்டும்
ஞானியின் வாழ்வில்!
நிலவொளி மழையில்
நனைந்து நனைந்து
இன்னும் ஞானம் கூடட்டும் ‘ஞானி’க்கு!
*

அன்புடன்,
ப்ரியன்.

Reader Comments

  1. திருமால்

    aga..aga..aga..aga…aga..

    கலக்கலா இருக்கு விக்கி…

    (கவிதை உணர்த்திய நீதி: கவிதை ‍ங்றத சாக்கா வச்சு, ரெண்டு மூனு வயசு பெரியவங்கள கூட‌ , அவன்‍ இவன்‍னு சொல்லலாம்)

    சும்ம தமாசுங்க….

  2. தம்பி

    கலக்கிட்டிங்க ப்ரியன்

    அன்புடன்
    தம்பி

  3. SK

    நிலவைக் கண்டு,
    நிலவை ரசித்து,
    நிலவை அடைய
    நிறையக் கனவுடனே
    நித்தமும் முனைந்து
    நிலவை நோக்கி
    நெஞ்சப் பயணமாகி
    நிலவை இன்று
    நிக்காஹ் செய்யும்
    நிலவு நண்பனே!
    நினக்கு வாழ்த்துகள்!

    நிலவின் அழகினை ரசித்து வந்தாய் இதுவரை!
    நிலவில் குளுமை உண்டு, களிப்பும் உண்டு
    நிலவில் மேடும் உண்டு, பள்ளங்களும் உண்டு
    நிலவை நேசித்து, நிலவு முகம் வாடாமல்
    நிலவின் நண்பனாய், நெருங்கிய தோழனாய்
    நிலவைப் பேணி, போற்றி,பகிர்ந்து, பணிந்து
    நிலவுள்ள வரை, நிலமுள்ள வரை
    நிடூழி வாழ வாழ்த்துகிறேன்!

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/