பூப்படைந்த கவிதை!

நானும் நீயும்
தூரமாயிருக்கும் போது
சுடுகின்ற
அதே மவுனம்!

அருகருகே இருக்கையில்
அழகாய் இடையில்
வந்தமர்ந்துக் கொள்கிறது!

*

என் கவிதை புத்தகத்தில்
கண் தெரியாதவள் போல்
வருடி நீ படித்த
அக்கவிதைதான்
பூப்படைந்த கவிதை!

*

உனைப் பார்க்கப் போகும்
அந்நொடியில்தான்
அடைப்பட்டிருக்கிறது
எந்தன் உயிர்!

*

உன்னிடம்
பேசிக்களிக்க
புது மொழி கண்டறிந்தேன்!
மெள்ள விசாரித்ததில்
கண்டேன்
அதன் மொழி மவுனம்!

*

உன் நினைவுகளை
அடுக்கி அடுக்கி வைத்ததில்
என் இதயம் ஆனது
பெரிய காதல் நூலகம்!

*

காதல் கடவுளிடம் கேட்டுவைத்தேன்
அவனுக்கே தெரியவில்லையாம் – இப்போது
உன் வாசலில் காத்து கிடக்கிறோம்
சாளரம் திறந்து சொல்லிவிட்டுப் போ
காதல் என்ன நிறம்!

– ப்ரியன்.

Reader Comments

  1. இந்து சமுத்திர முத்து

    ப்ரியன் உங்கள் கவிதைகள் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு …..

  2. இராம. வயிரவன்

    வளமான கற்பனை
    வருகிறது உங்களுக்கு
    ஏன் காதலோடு மட்டுமே
    காதல் கொள்கிறீர்கள்?
    அதையும் தாண்டி
    உயரப்பறந்து உலகைப்பாருங்கள்!

  3. Anonymous

    ஏதோ ஓர் மூலையில் மறைந்து கண்ணீர்வடித்தபோது
    ஓர் கரம் என்னை ஆதரவாய் வருடியது
    அது…
    நீ தான்!!
    என் அருகில் நின்றாய்!!!
    என்ன ஏது என்று கண்களால் வினாவினாய்
    காரணம் சொல்லத் தெரியாமல் மௌனமாய் நின்றேன்
    உன் பார்வையின் கூர்மை என்னை ஏதோ செய்தது
    “ஒன்றுமில்லை” என சிக்கு முக்காடி என் கண்களை அதிலிருந்து விலக்கினேன்
    அக்கணத்தில் என்ன தோன்றியதோ உனக்கு
    என்னைவிட்டு அகன்று சென்றாய்
    ஒரு சில வினாடிகள் மறந்திருந்த என் துயரம்
    மறுபடியும் வெளியே வெடித்து விசும்பலாக வடிய …

    எங்கு இருந்து ஓடிவந்தாயோ
    சட்டென இதயத்தோடு இதயத்தை பேசவைத்தாய்
    இறுக இவளை அணைத்துக் கொண்டாய்!
    என் கண்ணீர்த்துளிகள் உன் மார்பை நனைத்து
    – எனை சிலிர்க்கவைத்தது.

    அப்படியே மரந்துவிட்டேன்
    என் துயரத்தை மட்டுமல்ல
    என்னையும்!!!

    -santya

  4. yal_ahathian

    அருகருகே இருக்கையில்
    அழகாய் இடையில்
    வந்தமர்ந்துக் கொள்கிறது!

    enna- arumaiyana -anupavam- priyan -mm -ezuthunkal -innum -nanyudan- yal_akathian

  5. ப்ரியன்

    நன்றி வேணு , ‘ரசிகை’ & தேவ்…(என்ன தேவ் திடீர்ன்னு ;))

  6. ப்ரியன்

    முன்னமே படித்துவிட்டேன் செந்தழல் ரவி.சுட்டியமைக்கு நன்றி!

  7. ப்ரியன்

    நன்றி M.K.Subramanian அண்ணா , பழனி , துபாய் ராஜா.

    வந்தமைக்கும் பின்னூட்டம் தந்தமைக்கும்.

  8. தேவ் | Dev

    ப்ரியன் மென்மையான வரிகளால் மனத்தை வருடிவிட்டீர்கள்.

  9. Anonymous

    Poopadaintha kavithai!…

    Enna oru aalamana unarvu.. naan Migavum rasithathu priyan…
    Ungal kathaliyin sparisathai unarvupoorvamaga veli paduthi irukureergal… vazthukkal priyan..

    Ungalin Rasigai 🙂

  10. Anonymous

    “என் கவிதை புத்தகத்தில்
    கண் தெரியாதவள் போல்
    வருடி நீ படித்த
    அக்கவிதைதான்
    பூப்படைந்த கவிதை!”

    என் வாழ்நாளில் படித்த சில சிறந்த கவிதைகளுள் ஒன்று!

    -வேணு
    (same venugopal from Orkut…I haven’t completed reading all your poems…man….you have a load of them! keep it up!!)

  11. செந்தழல் ரவி

    அருள் இப்போதான் காதலுக்கு வானவில்லின் அத்தனை நிறத்தையும் கூப்பிட்டு இருந்தார்…

    நீங்க என்ன நிறம் என்று தேடுறீயள் ??

    அவர் கவிதையை வாசித்து ஒரு முடிவுக்கு வரவும்…

  12. (துபாய்) ராஜா

    அன்பு ப்ரியன்,கவிதைகள் அனைத்துமே அருமை.வாழ்த்துக்கள்.

  13. பழனி

    /* உன் நினைவுகளை
    அடுக்கி அடுக்கி வைத்ததில்
    என் இதயம் ஆனது
    பெரிய காதல் நூலகம்! */

    என்ற வரிகள் நல்லயிக்கு ப்ரியன் …

  14. M.K.Subramanian

    mks4321 ;

    ‘CHALARAM’ thirundu irrukku. Kadal
    kadavul anumadhi koduththar. Niramba, iru pooravum pesinaii. Manam oththu thirumanam
    nadandadhu. Piragu, enna? Aduhu dhan mukhyam. En enil, kadaiseeyaga,
    oru kuzhandai pirandadhu. Adarkku
    pinbaana kavidaigali ezhudungal! Adu melum sugaththai kodukkum!

    manian

  15. Naveen Prakash

    //நானும் நீயும்
    தூரமாயிருக்கும் போது
    சுடுகின்ற
    அதே மவுனம்!

    அருகருகே இருக்கையில்
    அழகாய் இடையில்
    வந்தமர்ந்துக் கொள்கிறது!//

    ப்ரியன் மௌனமான மௌனம் அழகு!!

    //வருடி நீ படித்த
    அக்கவிதைதான்
    பூப்படைந்த கவிதை!//

    ஆ பூப்படைவதென்பது இதுதானா??;)

    //உன்னிடம்
    பேசிக்களிக்க
    புது மொழி கண்டறிந்தேன்!
    மெள்ள விசாரித்ததில்
    கண்டேன்
    அதன் மொழி மவுனம்!//

    அழகு அழகு மௌன மொழியழகு !

    மௌனமாக அமர்கிறது
    மௌனமாக பேசுகிறது
    நூலகமாக ஆக்குகிறது
    நிறமென்ன காதலைத்தவிர !

    மௌனமும் மொழியாவது காதலில்தானே! அழகாக தொடுத்துள்ளீர்கள் !!!

  16. கப்பி பய

    //என் கவிதை புத்தகத்தில்
    கண் தெரியாதவள் போல்
    வருடி நீ படித்த
    அக்கவிதைதான்
    பூப்படைந்த கவிதை!
    //

    அருமை ப்ரியன்..அனைத்தையுமே ரசித்தேன்…

  17. ப்ரியன்

    பின்னூட்டமிட்ட ஆறு நண்பர்களுக்கு நான்கு கவிதைகள் பிடித்திருக்கின்றன 🙂 மகிழ்ச்சி

    4/6 = 66.67 %

    ஆனால்,எனக்குப் பிடித்தக் கவிதைகளான 3 வதும் 6 வதும் யாரும் குறிப்பிடவில்லை ம்ம்ம்

  18. ப்ரியன்

    ஆமாம் பொன்ஸ் *பெயர்* தான் அவசரத்தில் பெயர் -> மொழியாகிவிட்டது சுட்டியமைக்கு நன்றி!

  19. ப்ரியன்

    நன்றி கோவி.கண்ணன் & கார்த்திக்.முதலில் வந்த உங்கள் இருவருக்கும் ஒரே கவிதை பிடித்ததில் மகிழ்ச்சி

  20. அருட்பெருங்கோ

    ப்ரியன்,

    /நானும் நீயும்
    தூரமாயிருக்கும் போது
    சுடுகின்ற
    அதே மவுனம்!

    அருகருகே இருக்கையில்
    அழகாய் இடையில்
    வந்தமர்ந்துக் கொள்கிறது!/

    மௌனத்தின் வலியும் வலிமையும் ஒரு சேர ஒருக் கவிதை – அழகு!

    /என் கவிதை புத்தகத்தில்
    கண் தெரியாதவள் போல்
    வருடி நீ படித்த
    அக்கவிதைதான்
    பூப்படைந்த கவிதை!/

    கவிதை நன்றாகவேப் பூத்திருக்கிறது!

    எல்லாமே ரசிக்க வைக்கின்றன, ப்ரியன்!

  21. வெற்றி

    ப்ரியன்,
    அருமை.

    /* உன் நினைவுகளை
    அடுக்கி அடுக்கி வைத்ததில்
    என் இதயம் ஆனது
    பெரிய காதல் நூலகம்! */

    நல்ல கற்பனை. பாராட்டுக்கள்.

  22. ♠ யெஸ்.பாலபாரதி ♠

    //என் கவிதை புத்தகத்தில்
    கண் தெரியாதவள் போல்
    வருடி நீ படித்த
    அக்கவிதைதான்
    பூப்படைந்த கவிதை!//

    மற்றவைகளை விட.. தலைப்புக்கவிதையே என்னை கவர்கிறது.

  23. பொன்ஸ்~~Poorna

    மெள்ள விசாரித்ததில்
    கண்டேன்
    அதன் மொழி மவுனம்!

    அதன் பெயர் மவுனம்?

    எனக்கும் முதல் கவிதை ரொம்பப் பிடித்தது..

  24. கார்த்திக் பிரபு

    //நானும் நீயும்
    தூரமாயிருக்கும் போது
    சுடுகின்ற
    அதே மவுனம்!

    அருகருகே இருக்கையில்
    அழகாய் இடையில்
    வந்தமர்ந்துக் கொள்கிறது!//

    indha kavidhai arumai soopero sooper..marra kavidhaigalum nandraga irukiradhu

  25. கோவி.கண்ணன் [GK]

    //நானும் நீயும்
    தூரமாயிருக்கும் போது
    சுடுகின்ற
    அதே மவுனம்!

    அருகருகே இருக்கையில்
    அழகாய் இடையில்
    வந்தமர்ந்துக் கொள்கிறது!//

    நல்ல வரிகள்… பாராட்டுக்கள் !

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/