நீ நதியாக!

கரையாக
படர்ந்து கிடக்கிறேன்!
தொட்டு தவழ்ந்து
சிலிர்ப்பூட்டியபடி
நகர்கிறார் நீ நதியாக!

*

பட்டுப்போன
பூக்களாக
என் கவிவரிகள்!
உன் வாசிப்பில் மயங்கி
பூரித்து பூக்கிறது
புதுப் பூவாய்!

*

உயிருக்கு தூண்டில் போடும்
மீன்கள்
உன் கண்கள்!

*

நீயொரு பூவாய்!
நானொரு பூவாய்
தனித்து ரசித்து
சிரித்திருந்தோம்!
நம்மீது வந்தமர்ந்து
மன மகரந்த சேர்க்கை புரிந்து
புன்னகைத்து பறந்து திரிகிறது
காதல் வண்டு!

*

இதயத்தின் நான்கு
அறை சுவர்களிலும்
மாட்டிவைத்திருக்கிறேன்
உன் பு(ன்ன)கைப்படத்தினை!

– ப்ரியன்.

Reader Comments

  1. thiyagu

    இதயத்தின் நான்கு
    அறை சுவர்களிலும்
    மாட்டிவைத்திருக்கிறேன்
    உன் பு(ன்ன)கைப்படத்தினை!

    – கற்பனை உவமை அதிகமாக மிக
    நலினத்துடன் உள்ளது தங்கள் கவிதை ப்ரியன்

    தியாகு

  2. தேவ் | Dev

    //உயிருக்கு தூண்டில் போடும்
    மீன்கள்
    உன் கண்கள்!//

    Super

  3. Naveen Prakash

    //நீயொரு பூவாய்!
    நானொரு பூவாய்
    தனித்து ரசித்து
    சிரித்திருந்தோம்!
    நம்மீது வந்தமர்ந்து
    மன மகரந்த சேர்க்கை புரிந்து
    புன்னகைத்து பறந்து திரிகிறது
    காதல் வண்டு!//

    என்ன ஒரு அழகான கற்பனை !!! வாழ்த்துக்கள் ப்ரியன் :))

  4. கோவி.கண்ணன் [GK]

    //உயிருக்கு தூண்டில் போடும்
    மீன்கள்
    உன் கண்கள்!//

    ப்ரியன் … மீன் தூண்டில் போடுவதாக மாறுபட்ட சிந்தனை நன்றாக இருக்கிறது.. படித்தேன் ரசித்தேன் !

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/