நீளும் கரிய இரவில்
கண்சிமிட்டி சிமிட்டிப் பேசுகிறாய்!
இருளோடு பேசும்
மின்மினிகள் போல்!
*
உனது கிளைகளில்
எப்போதும்
இசைச் சொல்லித் திரியும்
குயில் நான்!
*
உன் அலங்கார அறையை
முன் அநுமதியின்றி எட்டிப்பார்த்தேன்;
ஒரு காதில் சூரியனையும்
மறு காதில் சந்திரனையும்
அணிந்து அழகுப் பார்த்திருந்தாய் நீ!
*
காதல் அகராதியில்
உன் பெயருக்கு நேராய்
என் பெயர்!
*
வலையோடு காத்திருக்கிறேன்
விண்மீனான உனைப்
பிடித்துவிடும் ஆசையோடு!
– ப்ரியன்.
Reader Comments
ரொம்ப நல்லாயிருக்கு ப்ரியன்….எல்லா வரிகளும் அருமை….பாராட்டுக்கள்…
ரொம்ப நல்லாயிருக்கு ப்ரியன்….எல்லா வரிகளும் அருமை….பாராட்டுக்கள்…
priyan pls correct the spelling mistake ‘anumadhi’.
ungal muththirai kavidhaigalk arumai..orkut layum padithane..valthukal..apppdiye namma pakkam vanga nan oru pudhiya kavidhai thodar aarampithrukirane..padichitu sollunga
mika nalla kavithai vazhthukkal.rishi_sethu@yahoo.com
//காதல் அகராதியில்
உன் பெயருக்கு நேராய்
என் பெயர்!//
எனக்கும் இந்த வரிகள்தான் பிடித்தவை.
//ஒரு காதில் சூரியனையும்
மறு காதில் சந்திரனையும்//
தோடுகளுக்கான்உவமானம், புதுசு கண்ணா புதுசு.
//காதல் அகராதியில்
உன் பெயருக்கு நேராய்
என் பெயர்!
//
good one!
மின்மினிகளின் மொழிக்கு கவிதை வடிவாமா? நல்லாயிருக்கு ப்ரியன்