முகமெல்லாம் வெட்கம் தொத்தி நிற்கும்!

ஒரு பூனையின் சாமார்த்தியத்துடன்
சமையறை நுழைந்து
பின் அணைத்து
அவன் இதழ் புணர்ந்த
அதிர்வின்று மீளா பேதையிவள்,
ஒன்றுக்கு இரண்டுமுறை
உப்பிட்டுவிட்ட உணவை
உண்டபடியே
ருசிப்பதாய் சொல்கிறான்;
இதழ் இன்னமும்!

*

மாராப்புக்கு
பின்போட்டுக் கொள்ளும் சமயங்களில்;
பின்னாக எனைக் குத்திக் கொள்ளேன் என்று
என்றோ அவன் சொன்ன
ஒற்றைவரி மனம் கொத்தி நிற்க
முகமெல்லாம் வெட்கம் தொத்தி நிற்கும்!

*

மொத்தமாய்
முழுசாய்
எல்லாம் கிடைத்துவிட்டப் பின்னும்
ஆடை மாற்றும் சமயங்களிலும்
அறையிலிருக்க வேண்டுமென
அடம்பிடிக்கிறாய்!
ச்சீ!
அல்பமடா நீ!

– ப்ரியன்.

Reader Comments

 1. barathi

  waw…..
  oru ponnukku kooda ippadi unarnthu yelutha theriyaathu ponnoda unarvukalai. chi alpamada nee yentru sollumpothu yevvalavu santhosam. realy i love you.

 2. Anonymous

  Mr.Priyan,
  Neenga enna kathalin mottha uruvama
  kathal, kathal….
  antha `manmadhan’ pol neenga enna
  kathal mannana – eppadippa ippadi
  eppavum kathal rasanaiyudan
  enjoy the life. In practial life also are you like this only.
  it is a gift.
  vijai/tr – could you remember me
  once a sent a email to you.

 3. Anonymous

  என்ன சொல்லி என்ன சொல்ல?
  காதல் உன்னை கையால் தள்ள‌
  இதயம் தான் சரிந்ததே உன் கவிதையில் மெல்ல

  கவிதையை பாத்துட்டு பேச்சு வரல.. அதான் ஒரு பாட்ட அவுத்து விட்டேன் 😉

 4. G.Ragavan

  🙂 இளமைத் துள்ளலோடு கவிதைகள்…ரசித்தேன்.

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/