அவனை முந்தானையாய் சுமக்கும் தருணங்கள்!

மொத்தம் எட்டு இடத்தில்
முற்றுப்புள்ளி வைத்திருக்கிறான்
பிரம்மன் உன்னில் என்கிறான்!
அடக் கடவுளே!
எனக்கே தெரியாத இடத்தில் ஒன்றா?
எப்படி கண்டுகொண்டான் இவன்!

*

காதல்
மயக்கத்திலிருக்கும்போது
என்னைவிட அவனுக்கு
ஒத்துப்பாடும் தோடையும்!
சீண்ட சீண்ட
சிணுங்கலுக்கு
என்னோடு போட்டிக்கு நிற்கும்
கொலுசையும்!
கழற்றி வீசியெறியவேண்டும் முதலில்!

*

அவனை முந்தானையாய்
சுமக்கும் தருணங்களைவிட
அற்புதமான தருணங்களிருப்பதாய்
தெரியவில்லை எனக்கு!

– ப்ரியன்.

Reader Comments

 1. Anonymous

  kocchaipaduthi parkamal
  kavithayai kavithayai mattum parkka
  rasanai sottukirathu
  kadhalukkenta padaithana unnai

 2. தாரிணி

  இது கொஞ்சம் அதிகம் தான்! ஆனால் அழகாக இருக்கிறதே!!
  வாழ்த்துக்கள்!

 3. Raghs

  அங்கங்கு தபூசங்கர் சம்மணமிட்டு அமர்ந்திருக்கிறார் அழகாக உங்கள் கவிதைகளில் ப்ரியன்..

  வாழ்த்துக்கள்..

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/