எண்ண அலைகள்
கணம் தவறாமல்
எழுந்தெழுந்து மோதி
உடைந்துக் கொண்டே இருக்கின்றன
வெந்நுரை பொங்க!
சின்னதாய்
பெரியதாய்
ஆயிரமாயிரம்
ஆசை மீன்கள்
வலம் வருகின்றன
மண்டிக்கிடக்கும் அழுக்கு பாசிகளை
புசித்து கொழுத்தப்படி!
அன்றொரு நாள்
என்னுள் சிந்திய
ஒற்றை கண்ணீர்த்துளியை
முத்தாக்கி அவளுக்கே
பரிசளித்திருக்கிறேன்!
பளபளப்பு காட்டி
மகிழ்வு பரப்பும் பவளமதின் ஒளியும்;
காதோடு ஒட்டிவைத்தால்
சிறு குரலில்
இசையும் சங்கின் சோகமும்;
மூழ்கிப்போன எண்ணற்ற
ஞாபகக் கப்பல்களதின்
சிதிலமடைந்த பாகங்களும்
சிக்கனமில்லாமல் கிடைக்க கூடும்
சிரமம் பார்க்காமல் அகழ்ந்தால்!
அணைத்து அரவணைப்பதில்
குறுகுறுப்பூட்டும் சிற்றலையாய்;
சீரும் கோபமதில்
புயலின் கோரமாயென
பலவாறாய் உணர்த்தியிருக்கிறேன்;
என்றாலும் எவரும்
ஏற்க மறுக்கின்றனர்
என்னை ஒரு சிறு கடலாகவேணும் !
– ப்ரியன்.
Reader Comments
:))))))))))
பலவாறாய் உணர்த்தியிருக்கிறேன்;
கடல் சில சமயங்களில் உங்களை மாதிரித்தான் அழுது வடிக்குமோ.