வெட்கத்தின் மை!

உன் வெட்கத்தின்

மையால்

வரையப்படுகிறது

அந்தி!

*

உன் புன்னகைகளை

மதுக் கோப்பையில்

நிரப்பித் தந்தேன்

தள்ளாடியபடி இருக்கிறது

இதயம்!

*

காதல் மீனுக்கு

பொரி

நீ,நான்!!

*

விரலசைத்து

நீ பேசும்போது

காற்று

ஓர் வீணை!

*

உன்னோடு

நான் இருக்கையில்

உலகின் பரப்பளவு

சில சதுர அடிகள்!

*

நீ சிந்தும்

வெட்கத்தை

சேலையென

உடுத்திக் கொள்கின்றன

என் கவிதைகள்!

 

– ப்ரியன்.

Reader Comments

  1. Gandhi

    vanakkam nanba………thirumanathirkku manamaarntha vaalthukkal………ungal kavithaigal ellam arumai………athai suttuthan en nanbargalukellam anupugiren…kovichukatheenga…….

  2. Saravana Kumar MSK

    அடடா.. அருமையான கவிதைகள்.. காதல் மயம்.. திருமண கனவு..

    எல்லா வளங்களையும் பெற்று காதலோடு வாழுங்கள்..

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/