நிகழப் போகிறது
மழை!
பிள்ளை வரைந்த
எளிய கோடாய்!
மின்னல்
இடியோடு
எம் மண்ணின்
வாசம் கொணரக்கூடும்
அது எம் நினைவாக!
யாரும் மழை வேண்டாவென
வேண்டி
கெடுத்திட வேண்டாம்!
எமக்காக அழ
யாருமற்ற இந்நிலத்தில்
எம்மோடு
அழுது அரற்றி
அரூபம் கொள்ளும்
அதில் கரையலாம்
கண்ணீர் துளிகள்
சில!
நின்று
நிகழட்டும் மழை!
– ப்ரியன்.
நன்றி : தை கவிதையிதழ் – 2009
தொடர்பு பதிவு : ஈழக்கவிதைகள்.
Reader Comments
மழையது மண்ணில் விழுந்தது…
மழைக்கான இக்கவிதை என் மனதில் நிறைந்தது!
வாழ்த்துக்கள் தோழரே!
//எமக்காக அழ
யாருமற்ற இந்நிலத்தில்
எம்மோடு
அழுது அரற்றி
அரூபம் கொள்ளும்
அதில் கரையலாம்//
மழையில் கரைந்து மாரியில் நனைந்த காலம் போய் துயரில் கரையும் நிலை.
கவிதைக்குப் பாராட்டுக்கள்.
சாந்தி
//நின்று
நிகழட்டும் மழை!//
அருமையான வரிகள்!
எமக்காக அழ
யாருமற்ற இந்நிலத்தில்
எம்மோடு
அழுது அரற்றி
அரூபம் கொள்ளும்
அதில் கரையலாம்
கண்ணீர் துளிகள்
சில!
*********************
Nice
மிகவும் அருமை. வாழ்த்துக்கள் !
தமிழ்மணம் விருதுக்கான வாக்கெடுப்பில், என் படைப்புக்கள் தங்களுக்குப் பிடித்திருந்தால் வாக்களிக்குமாறு வேண்டுகிறேன்.
கவிதை : ” கரிசக்காட்டுப் பொண்ணு”
சினிமா விமர்சனம் : விஜயின் “குருவி” படக் கதை – சிரிப்ப அடக்கிகிட்டு படிங்க
karisak kaattu ponnu .. Sl No: 41
http://tamiluzhavan.blogspot.com/2008/11/blog-post_13.html
Video: kozhi thinnum pasu .. Sl No: 18
http://tamizhodu.blogspot.com/2008/05/blog-post.html
kuruvi .. Sl No: 46
http://tamizhodu.blogspot.com/2008/04/blog-post_1936.html
நன்றியுடன்..
உழவன்
அருமை ப்ரியன் வாழ்த்துக்கள்