மண் நான்
மழை நீ
வா,
பொழிந்துவிட்டுப் போ!
*
நீ
என் கண்ணீரின்
மழை!
*
நீ
கண்ணீரின்
கனமானவள்;
மழையின்
அழகானவள்!
*
நீ
நனைய நனைய
குடையாகிறது
மழை!
*
நனைந்திருந்து திரும்பும்
உன்னில்
திட்டு திட்டாய்
வானம்!
*
மார்போடு சேர்த்தணைத்த
அந்நாளில்
உலகெல்லாம்
ஒரே மழையாக இருந்தது!
*
வானம்
உன் மேல் எழுதும்
கவிதைக்கு
மையாகிறது மழை!
*
நீ சாய்ந்துக் கொள்ள
சிலிர்ப்பில்
துளி துளியாய்
வானம் உதிர்கிறது
மழை நனைந்த மரம்!
*
வா,
நனைவோம்
கரைவோம்
மீண்டு
மழையோடு மழையாக
பொழிவோம்!
*
நீ
நனைய
மழை குளிக்கிறது
உன்னழகில்!
*
நீ
எவ்வளவு நனைந்தாலும்
கரையா
சர்க்கரைக்கட்டி!
*
நீ நனைய
என்னில்
காமக் காய்ச்சல்!
*
நனைந்தாலும்
உரசலில் பற்றிக் கொள்ளவே செய்கிறது
உடல் தீக்குச்சிகள்!
*
– ப்ரியன்.
Reader Comments
///நீ
எவ்வளவு நனைந்தாலும்
கரையா
சர்க்கரைக்கட்டி!///
nanru.
viki azaga iruuku…… rasikaumpadiya niraya yezuthunga….
உங்களுக்கு விருது வழங்கும் தகுதி என்னிடம் இல்லை.ஆனால்,உங்கள் எழுத்தை நேசித்த பிரியத்தை காட்ட வேறு வழியும் தெரியவில்லை எனக்கு.நேரம் வாய்க்கிற போது,வீடு வாருங்கள்.நிறைய அன்பும் நன்றியும்!
///நீ
நனைய
மழை குளிக்கிறது
உன்னழகில்!//
வாழ்த்துக்கள்
நனைந்தாலும்
உரசலில் பற்றிக் கொள்ளவே செய்கிறது
உடல் தீக்குச்சிகள்!
கவீதை நன்றாக இருக்கிறது .கடைசி வரிகள் பிடித்த வரிகள் .வாழ்த்துக்கள் …..ப்ரியன் ,,,,,,,