நன்றி : நவீன விருட்சம்
பூட்டிய வீட்டினுள்
மெல்ல மெல்ல
உருவம் பெற்று அறை அறையாய்
அலைய தொடங்குகிறது
வீட்டின் தனிமை
விட்டெறிந்த காலுறையின்
நெடி சுவாசித்து
கழிவறையின் மூத்திர
நாற்றம் நுகர்ந்து
நாள்முழுதும் வலம் வந்த அது
பின்னிரவில் திரும்பும்
என் கரம்பற்றி
அமர்த்தி சொல்ல ஆரம்பிக்கிறது
மதியம் ஜன்னல்கண்ணாடிக் கொத்தி
அதனுடன் பேசிச் சென்ற
சிட்டுக்குருவி ஒன்றின் கதையை!
மெல்ல மெல்ல
உருவம் பெற்று அறை அறையாய்
அலைய தொடங்குகிறது
வீட்டின் தனிமை
விட்டெறிந்த காலுறையின்
நெடி சுவாசித்து
கழிவறையின் மூத்திர
நாற்றம் நுகர்ந்து
நாள்முழுதும் வலம் வந்த அது
பின்னிரவில் திரும்பும்
என் கரம்பற்றி
அமர்த்தி சொல்ல ஆரம்பிக்கிறது
மதியம் ஜன்னல்கண்ணாடிக் கொத்தி
அதனுடன் பேசிச் சென்ற
சிட்டுக்குருவி ஒன்றின் கதையை!
– ப்ரியன்.
Reader Comments
ப்ரியன்,
//மதியம் ஜன்னல்கண்ணாடிக் கொத்தி
அதனுடன் பேசிச் சென்ற
சிட்டுக்குருவி ஒன்றின் கதையை!
//
அருமை
That’s a good one..
I have added it to the படித்தது / பிடித்தது series in my site:
http://www.writercsk.com/2009/07/52.html
உங்கள் கவிதை வரிகள் மிக அருமையாக இருக்கின்றது.வாழ்த்துக்கள் ……….
வாழ்த்துகள் ப்ரியன்
very nice poem da.
expectin more like this…
ப்ரியன்,
கவிதையின் தலைப்பே கவிதையாய் அமைந்திருக்கிறது.
//மதியம் ஜன்னல்கண்ணாடிக் கொத்தி
அதனுடன் பேசிச் சென்ற
சிட்டுக்குருவி ஒன்றின் கதையை!
//
அதிகம் ரசித்த வரிகள்.