பேவு பெல்லா

பேவு – வேப்பம் பூ

பெல்லா – வெல்லம்

கன்னட / தெலுங்கு வருடபிறப்பான(உகாதி) நாளைய தினம் , வாழ்வின் இரு பக்கங்களான சுகம் , துக்கத்தை குறிக்கும் வகையில் சுகத்தினை குறிக்க இனிப்பான வெல்லத்தையும் , துக்கத்திற்கு கசப்பான வேப்பம் பூவையும் கலந்து பேவு பெல்லா தயாரித்து கடவுளுக்கு படைத்து பின் உண்ணுவது கன்னட மக்களின் வழக்கம்.தெலுங்கு மக்கள் இனிப்பு , கசப்பு , உவர்ப்பு , காரம் , துவர்ப்பு , புளிப்பு என எல்லா வகை சுவைகளையும் கலந்து தயாரிப்பார்கள் அதன் பெயர் “உகாதி பச்சடி”.

பேவு பெல்லா செய்முறை :

வேப்பம் பூவையும் பொடியாக்கிய வெல்லத்தையும் கலந்து சிறிது நேரம் வைத்தால் பேவு பெல்லா தயார்.

எங்கள் வீட்டில் ,

வேப்பம் பூவையும் பொடியாக்கிய வெல்லத்தையும் வாழைப் பழத்தையும் சிறிது நெய்யும் கலந்து செய்வார்கள்.எங்கள் கிராமத்தில் இதை பிள்ளையார் கோவிலில் கொடுத்து பலர் கொடுத்ததுடன் கலந்து , பின் நம் பங்கை பிரித்து தருவார்கள்.காலை உணவுக்கு(அநேகமாக இட்லி) முன் வெறும் வயிற்றில் உண்போம்.

தெலுங்கு மக்கள் முறை : உகாதி பச்சடி

 1. வேப்பம் இலை – கசப்பு
 2. மாங்காய் – துவர்ப்பு
 3. உப்பு – உவர்ப்பு
 4. வெல்லம் – இனிப்பு
 5. புளி சாறு – புளிப்பு
 6. மிளகாய் – காரம்

நறுக்கிய வெப்பம் இலை , மாங்காய் , மிளகாய் உடன் சிறிது உப்பு , புளிசாறு , பொடியாக்கிய வெல்லம் கலந்தால் ‘உகாதி பச்சடி’ தயார்.

தமிழனோ , கன்னடனோ , தெலுங்கனோ ,  இந்துவோ , முஸ்லீமோ , உகாதியோ , வேறெரு நாளோ வேப்பம் இலை/பூவை உடலில் சேர்ப்பது நல்லது , இயற்கை தந்த கிருமி நாசினி.பேவு பெல்லா / உகாதி பச்சடி செய்து உண்டு பார்ப்போமே.

Posts Tagged with…

Reader Comments

 1. thirupoonthurathi

  viki kaalailaye naavoora seiringa…
  unga veetla pevu pellava….

  innum niraya…niraya… yezudhunga…
  kavithaiya sonnempa…

  aana nalla information…..

 2. பிரேம்குமார்

  //தமிழனோ , கன்னடனோ , தெலுங்கனோ , இந்துவோ , முஸ்லீமோ , உகாதியோ , வேறெரு நாளோ வேப்பம் இலை/பூவை உடலில் சேர்ப்பது நல்லது , இயற்கை தந்த கிருமி நாசினி.பேவு பெல்லா / உகாதி பச்சடி செய்து உண்டு பார்ப்போமே.
  //

  இந்த வரிகளுக்காகவே இந்த பதிவை ரசித்தேன்

  மத்தபடி அகிலன் கமெண்ட் சூப்பர் 😉

 3. த.அகிலன்

  அதான் உங்களுக்கு கல்யாணமாடிச்சின்னு எங்களுக்கு தெரியும் தானே.. அப்புறம் எதுக்கு சமையல் பதிவு போட்டு அழறீங்க.. இடுக்கண் வருங்கால் நகுக கேட்டதில்லையா நீங்க.. சரி பேவு பெல்லாவாச்சும் உங்க துன்பத்தை குறைக்குதான்னு பாப்பம்..

  (மது அக்கா பின்னூட்டம்லாம் படிக்க மாட்டாங்கள்ல)

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/