மரம் கனவு

மேடானப் அப்பகுதியில்
ஒற்றை மரம்
துணையில்லாமல்!

பறவைகளின் பட்சிகளின்
குரல்களுக்கு மட்டும்
குறைவில்லாமல்!

ஒரு
நட்டநடு நிசியில்
நன்றாக உலகம் உறங்க
திடீரென தானே வேர்களை
பூமியிலிருந்து வெட்டி
மேலே பறக்கத் தொடங்குறது
மரம்!

திடுக்கிட்டுப் பார்க்கிறேன்
கொஞ்ச நேரம்
பேயரைந்தவன் போல்
பேச்சுவராமல்!

பறவைகளின் கதி
என்னவாகுமோ?
நித்திரையிலிருக்கும் பறவைகளை
எழுப்ப கத்தி கத்தி
வார்த்தை தொலைக்கிறேன்
சப்தம் மட்டும் வந்தபாடில்லை!

கை தூக்கி
மரம் பறக்கிறது
பட்சிகளுக்கு சைகை
காட்டுகையில்;
எந்திரிங்க அலுவலகத்துக்கு
நேரமாயிடும் மனைவின்
குயில் குரல் கேட்டு
விழித்தெழுகிறேன்!

சுற்றும் முற்றும்
பார்த்ததும் முடிவாகிறது
கண்டது கனவென்பது!

என்றாலும்,
பறக்கும் மரம்
பறவைகளின் கதி
நினைத்து தொலைக்கும்
மனது;
அடுத்த கனவு காணும் வரை!

– ப்ரியன்.

Reader Comments

  1. ப்ரியன்

    இல்லை முகில்காதலிடம் கேட்டு பார்த்தேன் என்னுடன் “டூ” வாம்..

  2. துடிப்புகள்

    நச்!
    கொஞ்ச நாளாக காதலைக் காணவில்லை.
    எங்கே வெளியூருக்குப் போயிருக்கிறதா?

  3. யாத்திரீகன்

    அடாடா ! தமிழ் படம் மாதிரி முடிஞ்சிருச்சே !!!

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/