ஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 28

என் எழுத்துக்கள்
உன் இதழோர
ஒற்றை மச்சப்புள்ளியில் துவங்கி
அதே மச்சப்புள்ளியில்
முடிந்து போகிறது.

– ப்ரியன்

ஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 27

 

உனக்கான காத்திருப்பில்
மஞ்சள் அலகு
பறவையொன்று
சிந்திச்சென்ற எச்சத்திலிருந்து
துளிர் விடத்தொடங்குகிறதொரு
சிறு வனம்;
அவ்வனத்தில் நான் தொலைந்திடும் முன்
வந்துவிடு!

– ப்ரியன்.