இரசிக்கும் பாடல் – 01

முதன்முறை கேட்டதிலிருந்து இன்றைய தேதிவரை எனக்கு பிடித்தமானதாக இருக்கும் சில பாடல்களின் வரிசை…

படம் : சதுரங்கம்
பாடல் : விழியும் விழியும்
இசை : வித்தியாசாகர்
கவிதை : அறிவுமதி

ஆணும் பெண்ணும் இணைவதை துளியும் காமம் இல்லாமல் இத்துணை அழகாக சொல்ல முடியுமா என ஆச்சரியம் காட்ட வைக்கும் பாடல்.நல்ல கவி வரிகளை மென்று தின்னா இசை.

நீங்களும் கேட்டு பாருங்க…

பாடல் வரிகள் :

விழியும் விழியும் நெருங்கும் பொழுது
வளையல் விரும்பி நொறுங்கும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு

இதழும் இதழும் இழையும் பொழுது
இமையில் நிலவு நுழையும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு

காதலினால் காதல் தொட்டு விடு
ஆதலினால் நாணம் விட்டு விடு

முத்தம் ஒன்று தந்தவுடன் மூடி கொள்ளும் கண்கள்
மொத்தமாக கூந்தல் அள்ளி மூடி கொள்ளும் கைகள்

உடல் இறங்கி நீந்தும் என்னை உயிர் இழுத்து செல்லும்
ஒய்வு தந்த காரணத்தால் உடைகள் நன்றி சொல்லும்

விரலும் விரலும் இறுகும் பொழுது
முதுகின் சுவரில் வழியும் விழுது

உறங்கிடாமல் உறங்கிடாமல் கிறங்கி விடு…

புயல் முடிந்து போன பின்னே
கடல் உறங்க செல்லும்

கண் விழித்த அலை திரும்ப
களம் இறங்க சொல்லும்

உயிர் அணுக்கள் கோடி நின்று ஓசை
இன்றி கிள்ளும்

ஒரு நொடிக்குள் நூறு முறை மெத்தை
இங்கு துள்ளும்

இமையின் முடியால் உடலை உழவா
இளமை வயலில் புயலை நடவா

இசைத்திடாமல் இசைத்திடாமல் மூச்சு விடு…

பாடல் வரிகள் இங்கிருந்து சுடப்பட்டது.

5 thoughts on “இரசிக்கும் பாடல் – 01”

 1. அருமையான வரிகள்,இந்தப் பாடலை கடந்த இரண்டு வருட காலத்தில் பலமுறை
  கேட்டிருக்கிறேன்,ஆனால் இந்தப் படம் இன்னும் வெளிவராததால் இந்தப் பாடலும் பிரபலமாகாமலேயே இருக்கிறது .

 2. இன்று தான் பாடலை கேட்டடேன். நல்ல பாடல் தான் 🙂

 3. பிரியனுக்கு ! பிரியமான வாழ்த்துக்கள்.
  பிரியமுடன்,
  தவப்புதல்வன்

 4. அருமையான பாடல் தான்.
  நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.