அது , அது மட்டுமே காதல்! # 02

இரட்டை கால்தடங்களை
எங்கு கண்டாலும்
மனம் நிரம்பிவிடுகிறது
கைக்கோர்த்து நாம் நின்றிருந்த
கணங்களால்!

*

மீன்கொத்திகளை
கேட்டிருக்கிறேன்;
உன் கண்கள்
கண்கொத்தி மீன்கள்!

*

தேவதைகளின்
உறைவிடம் விண் மட்டுமல்ல;
சில நேரங்களில்
எதிர் வீடும்!

*

காதல் –
சிலுவை;
யாரும் சுமக்காமல் இல்லை!

*

உருண்டு திரண்டு
வழிய காத்திருக்கும்
உன் ஒற்றை கண்ணீர்துளியினுள்
உறைந்துவிடுகிறது என்னுலகம்!

*

– ப்ரியன்.

அது , அது மட்டுமே காதல்! # 01

Reader Comments

  1. Om Santhosh

    இது எல்லாமே இருப்பதுதான் காதல் . காதலின் பிரிவும் சந்தோசமும் ஒன்றுதான்

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/